Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Articles

இரங்கலுக்கு நன்றி


என் அன்புக்கினிய சகோதரர்களே, சகோதரிகளே,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.

உங்கள் இரங்கல், துஆ, வருகை, உதவி, ஆதரவு யாவற்றுக்கும் எமது அபரிமிதமான நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். எமது குடும்பத்தில் எல்லாரிலும் மூத்த அங்கத்தவரான எனது பிரியத்துக்குரிய தாயாரை 2020.02.03 அன்று நாம் இழந்து துக்கமுற்றிருந்தபோது உங்களின் துயராற்றல், பிரார்த்தனை, வருகை, உதவி, ஆதரவு அனைத்தும் உண்மையில் எமக்கு ஆறுதலளிப்பவையாகவிருந்தன. ஜஸாக்கும் அல்லாஹ் கைரா.

ஜனாஸாவின் இறுதிக் கிரியைகளில் ஈடுபட்டு வேலையாகவிருந்தபடியால் உங்கள் தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் சொல்ல முடியாதுபோய்விட்டது. அதற்காக உங்களிடம் மன்னிப்பு கோருகிறோம்.

இறுதிக் கிரியை வேளை நீங்கள் எம்மோடு ஒன்றாக இருந்தும் நாம் உங்களுடன் தனியே அமர்ந்து கதைக்க முடியாமல்போனதையிட்டு பெரிதும் வருந்துகிறோம்.

எங்களுக்கும் உங்களுக்கும் நீண்ட ஆயுள், நிறைவான சுகம், நல்ல முடிவு மற்றும் ஈருலக உவகையைத் தருமாறும், நம் யாவரையும் ஒருவர் மற்றவருக்கு உதவியாக ஆக்கிவைக்குமாறும் அல்லாஹ் தஆலாவிடம் மன்றாடிக் கேட்கிறோம். எனது பாசத்துக்குரிய அன்னையையும் எல்லா முஸ்லிம் அன்னையரையும் பொருந்திக்கொள்ளுமாறும், அவர்களை மன்னித்து, அவர்கள் மீது கருணை காட்டுமாறும், அவர்களின் அந்தஸ்துகளை உயர்த்தும்படியும், அவர்களை மகிழ்ச்சியாக வாழச்செய்வதோடு அவர்களைக் கொண்டு எம்மை மகிழ்ச்சியாக வாழச்செய்யும்படியும் கருணையாளன் அல்லாஹ்விடம் கெஞ்சிக் கேட்கிறோம்.

உங்களது பெறுமதியான துஆக்களின்போது வபாத்தான என் அருமைத் தாயையும் எம்மையும் நினைத்துக்கொள்ளுமாறு உங்களை தயவாக வேண்டுகின்றோம்.


அப்துல் நாஸர் மற்றும் குடும்பத்தார்

2020.02.12


 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page