Articles
தலைசிறந்த ஆய்வாளர் எம்.எம்.எம். மஹ்ரூப்
அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர்
மல்லிகை 2008 டிசம்பர் இதழ் படித்தேன். அதில் சகோதரர் எஸ்.எச்.எம். ஜமீல் எழுதியிருந்த
‘பித்தன் கதைகள்’ எனும் ஆக்கத்தில் இடம்பெற்றிருந்த ‘இந்நாட்டின் தலைசிறந்த
ஆய்வாளரான எம்.எம்.எம். மஹ்ரூப் அவர்கள் இச்சிறுகதைத் தொகுதிக்கான நீண்ட விமர்சன
நோக்கொன்றினைச் செய்துள்ளார்.’ எனும் வரிகள் என் கவனத்தை ஈர்த்தன. இப்பின்னணியில்தான்
இதனை எழுதி அனுப்புகின்றேன்.
எம்.எம்.எம். மஹ்ரூப் ஈழத் திரு நாடு கண்ட தலைசிறந்த அறிஞர், ஆய்வாளர், எழுத்தாளர்,
விமர்சகர், ஆசிரியர். அவரின் ஆக்கப் படைப்புக்கள் இதற்கு தக்க சான்றாகும்.
அவரை அறிந்த, புரிந்த எவரும் அன்னாரின் அபார ஆற்றலை, பன்முகப் புலமையை முழு
மனதாக ஏற்றுக்கொள்வர்.
அவர் நிறையவே எழுதினார். உள்நாட்டு, வெளிநாட்டு நாளிதழ்கள், பருவ வெளியீடுகள்,
சஞ்சிகைகள் அவரின் எழுத்தாக்கங்களை சுமந்து வந்தன. சர்வதேச புகழ்பூத்த ஆய்வு
சஞ்சிகைகளில் அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் தலைமுறை தலைமுறையாக நிலைத்து
நின்று ஆய்வாளர்களுக்கும், ஏனையோருக்கும் பயன்தரக்கூடிய கனதியான, காத்திரமான
ஆக்கங்களாகும். அவரின் ஓர் ஆய்வுக் கட்டுரையைப் படிப்பது பல நூற்களைப் படிப்பதற்கு
சமம்.
அன்னாரின் அந்திம காலத்தில்தான் அவரது எழுத்துக்களைப் படிக்க, அவரைப் பற்றி
அறிய சிறியவனான எனக்கு வாய்ப்புக் கிட்டியது. அவரின் படைப்புகளுடாக அவரை சந்தித்துள்ளேன்.
அவரை நேரடியாக சந்திக்கும் சந்தர்ப்பம் கிட்டவில்லையே என இன்னமும் கவலைப்படுவதுண்டு.
தொலைபேசியில் சில தடவைகள் அவருடன் கதைத்துள்ளேன்.
இப்பெரு மனிதர் பற்றி, அவர் தம் சேவைகள் பற்றி, அவரின் ஆக்க இலக்கியப் பங்களிப்பு
பற்றி இது வரையும் ஆக்கபூர்வமான குறிப்பிட்டுக் கூறத்தக்க எதுவுமே காணக்கிடைக்காமலிருப்பது
பெருங் கவலையாகும். அவரை நேரடியாகக் கண்டோர், பழகியோர், பயன்பெற்றோர், அவரின்
மாணவர்கள் என்றெல்லாம் பலர் உள்ளனர். யார் யாருக்கெல்லாம் எதை எதையோ செய்கின்ற
நாம் உறுப்படியான காலத்தால் அழிந்து போகாத விலைமதிக்க முடியாத பொன்னான எண்ணிறந்த
இலக்கிய ஆய்வுப் பணிகளை ஆரவாரமின்றி அமைதியாக இருந்து செய்து விட்டு சென்ற
மர்ஹூம் எம்.எம்.எம். மஹ்ரூபை மாத்திரம் நினைக்கத் தவறுவதேன்? இது செய்நன்றி
கொல்லலாகாதா?
பல்வேறு தலைப்புக்களில் அவர் அவ்வப்போது எழுதிய ஆய்வுக் கட்டுரைகளை ஒன்று
திரட்டி ஒரு தொகுப்பாக வெளியிட்டால்கூட சமூகத்துக்கு மிகுந்த பயன்தரும். சகோதரர்
எஸ்.எச்.எம். ஜமீல் போன்றோர் தாராளமாக இதற்கு முன்வரலாம். கல்விமானாக, எழுத்தாளராக
நன்கு அறியப்பட்ட சகோதரர் எஸ்.எச்.எம். ஜமீல் இத்யாதி பணிகளைச் செய்து சாதனை
படைத்தவர். மறைந்த அறிஞர் ஏ.எம்.ஏ. அஸீஸின் செனட் உரைகளைக்கூட அண்மையில் தொகுத்து
வெளியிடுவதில் பாரிய பங்காற்றியுள்ளார். அவரும், அவரை ஒத்தோரும் இதனை செய்து
முடிக்கத் தவறினால் வேறு யாரும் செய்வார்கள் என்று சொல்ல முடியாது. இன்றைய
இளந் தலைமுறையினருக்கு எம்.எம்.எம். மஹ்ரூப் எனும் நாமம்கூட பெரும்பாலும் முற்றிலும்
புதிதுதான்.
இது எனது பணிவான ஆலோசனை. சமூகத்துக்காக எழுதியவரை சமூகம் எழுதத் தவறக் கூடாது.
அப்படி நடந்தால் அது மிகப் பெரும் வரலாற்றுத் தவறாகும், நன்றி கெட்ட செயலுமாகும்.
ஏதும் முயற்சிகள் இது தொடர்பில் முன்னெடுக்கப்படுமானால் எனது பங்களிப்பையும்
நல்கத் தயார் ‘இன் ஷா அல்லாஹ்’.
2008.12.08
* அருமை நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் எழில் திரு மேனி
* வியாபாரத்தில் இஸ்லாமியப் பண்பாடுகள்
* இரந்து வாழும் பழக்கம் இல்லாதொழியட்டும்
* சுபிட்சமான சமூகத்துக்கு அத்திவாரமிடுவோம்!
* குடும்பச் சுமை
* இஸ்லாமிய பொருளியலின் தோற்றமும், முதலீட்டு நிறுவனங்களும்
* இஸ்லாம் பற்றிய அநாவசிய பயம்
* நாடறிந்த கல்விமான் மர்ஹூம் மவ்லவி முஹம்மத் புஆத் (பஹ்ஜி)
* அல்-குர்ஆனிய திங்கள்
* மரண தண்டனை ஓர் இஸ்லாமிய நோக்கு
* கட்டுப்பட்டு வாழ நம்மைப் பயிற்றுவித்தது ரமழான்
* பிழையான அக்கீதாக்கள்
* பிறருக்காக இரங்கிய நபி இப்ராஹீம் (அலைஹிஸ் ஸலாம்)
* தலைநகர் கண்ட ஏழு பெரும் விழாக்கள்
* தலைசிறந்த ஆய்வாளர் எம்.எம்.எம். மஹ்ரூப்
* அல்லாஹ் இறக்கி வைத்த தராசு எங்கே?
* ஷூரா இன்றியமையாதது
* அகவை 48
* மவ்லானா அபுல் ஹஸன் அலி அல்-ஹஸனி அல்-நத்வி அவர்களின் கையெழுத்து
* கொழும்பு பெரிய பள்ளிவாசல்
* பத்து ஆண்டுகள் உருண்டோடிவிட்டன
* புதுப் பள்ளி சில நினைவுகள்
* குதிரை மலை
* அஷ்-ஷைக் முஹம்மத் இப்ன் நாசிர் அல்-அப்பூதி
* அப்த் அல்-ஜப்பார் முஹம்மத் ஸனீர்
* இமாம் ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்) அவர்களுடன் சங்கமித்துபோனேன்
* இறுதி நாளன்று இறுதிக் கவிதை
* தூய்மையற்ற நண்பன்
* இலங்கை மலைகளை விளித்த இமாம் ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்)
* பொறாமைக்காரர்களுக்கு இமாம் ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் பொன்னான பதில்
* இலங்கையில் ஷாபிஈ மத்ஹப்
* நல்லன்பு பூணுவோரும் சந்தேகத்துக்கிடமான அன்பு பூணுவோரும்
* பானத் ஸுஆத்
* அக்குறணையே!
* மக்கா மதீனா பஞ்ச நிவாரணம்
* எனது முதல் கட்டுரை
* சகோதரர் ஹாஜா அலாவுதீன் அவர்களின் நூல்கள் வெளியீடு
* 60 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம்
* 1980.03.19 புதன்கிழமை - நெஞ்சம் மறப்பதில்லை
* நிற வெறி
* ஆலிம்கள் ஆங்கிலம் தெரிந்திருப்பது காலத்தின் தேவை
* நாகூர் பள்ளியும் தராவீஹ் தொழுகையில் குர்ஆன் பாராயணமும்
* மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா
* 1980களில் கடிதத் தொடர்புகள் - தொடர் - 01 - நிலைத்து நிற்கும் மனப் பதிவுகள்
* 1980களில் கடிதத் தொடர்புகள் - தொடர் - 02 - முப்பது ஆண்டுகளின் பின் அவரை சந்தித்தேன்
* 1980களில் கடிதத் தொடர்புகள் - தொடர் - 03 - பிரகடனப்படுத்தப்படாத போட்டி
* கொரனா நுண்ணங்கி தாக்குதல் பற்றிய முன்னறிவிப்பு
* மவ்லவி எஸ்.எச். அபுல் ஹஸன் - அவரது மறைவு ஆற்றொனா துயரைத் தருகிறது
* பசி வந்தால் பத்தும் பறக்கும்
* ஹாபில் கலீலுர் ரஹ்மான் ஒரு வியத்தகு பக்கா ஹாபில்
* கடனைச் சுட்டும் கர்ழ் எனும் பதம்
* அறிஞர் சித்தி லெப்பையை வாட்டிய துக்கம்
* செய்யத் முஹம்மத் காக்கா
* இது போன்றதொரு நாளில்தான் அந்தப் பெரியார் விடைபெற்றுக்கொண்டார்
* தரமான அரசியல்வாதிகள்
* தருணத்துக்கு ஏற்ற ஒரு வரலாற்றுச் சம்பவம்
* இரங்கலுக்கு நன்றி
* சிந்தி ! ! !
* ஆழிப் பேரலை - அழியாத தழும்புகளை தடவிப் பார்க்கிறேன்
* சர்வதேச அரபு மொழி தினம் - 2019 - ஒரு விசித்திரமான அனுபவம்
* சர்வதேச அரபு மொழி தினம் - 2019