Articles
பசி வந்தால் பத்தும் பறக்கும்
ஏனோ தெரியவில்லை. எடுத்ததற்கெல்லாம் முஸ்லிம்களையே குறைகூறுகிறார்கள். ஊரடங்கு சட்டத்தை மீறுவோரும் முஸ்லிம்கள்தான். Lockdownஐ உடைப்போரும் முஸ்லிம்கள்தான். Coronavirus பரப்புவோரும் முஸ்லிம்கள்தான். Quarantineஐ மதிக்காதோரும் முஸ்லிம்கள்தான். இப்படி அடுத்தவர் சிலர்தானே சொல்கிறார்கள். சொல்லிவிட்டுப் போகட்டும். விட்டுவிடுவோம் என பார்த்தால் நம் சமூகத்து மதியுரைஞர்களின் தொல்லை தாங்க முடியவில்லை. வானொலியில் வந்து எச்சரிக்கிறார்கள். தொலைக்காட்சியில் வந்து எச்சரிக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் வந்து எச்சரிக்கிறார்கள். ஓரிருவர் செய்கிற தவறுக்கு முழு முஸ்லிம்களும் அப்படித்தான் என அடித்துவிடுகிறார்கள். ஏதோ இந்த நாட்டில் முஸ்லிம்கள் மட்டும்தான் சட்டத்தை மீறுகிற மாதிரி கதைக்கிறார்கள்.
முஸ்லிம்கள் முன்மாதிரியாக வாழ வேண்டும். உண்மைதான். அதற்காக தவறே செய்யாமல் இருப்பார்களா? படித்தவர்கள், பண்பாளர்கள், தலைவர்கள் ஏன் முத்திப் பழுத்த மதியுரைஞர்களே தவறு செய்கிறார்களே. புத்தி சொல்லுங்கள். யாரும் வேண்டாமென சொல்லவில்லை. அதற்காக எல்லா தவறுகளும் முஸ்லிம்களால்தான் நடக்குதென சொல்லாதீர்கள்.
கொரனா நுண்ணங்கியால் எல்லா இலங்கையர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். முஸ்லிம்கள் கொரனா நுண்ணங்கியாலும் பாதிக்கப்பட்டு இனவாத நுண்ணங்கியாலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உங்கள் மதியுரையால் எரியும் நெருப்புக்கு எண்ணெய் வார்க்காதீர்கள்.
இவ்வளவு நெருக்கடியான நிலையிலும்கூட இனவாதம் போஷிக்கப்படுகிறதே. இது வேண்டாமென அவர்களுக்கு புரிகிற பாஷையில் கொஞ்சமாவது சொல்லுங்கள். மதியுரைஞர்களே!
வீட்டில் அடுப்பெரிய வழியில்லாமல் விழிபிதுங்கி நிற்கிறார் பல பேர். கையில் காசு இல்லாமல் ஆகாயத்தை அன்னாந்து பார்த்து நிற்கிறார் பல பேர். பல நாட்கள் அடைபட்டு பணத்துக்கு முடைப்பட்டு நிற்கிறார் பல பேர். நலிவுற்று நாதியற்று நிற்கிறார் பல பேர். மதியுரைஞர்கள் நிலைமையை புரிந்து மதியுரை வழங்குங்கள். மரத்திலிருந்து விழுந்து கிடக்கின்றனர் மக்கள். அவர்களை மாடேறி மிதிக்கிற மாதிரி மதியுரை வழங்காதீர்கள்.
பசி வந்தால் பத்தும் பறக்கும்.
மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை – தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம். – ஔவையார்.
ஹனிபா அப்துல் நாஸர்
2020.04.09
* அருமை நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் எழில் திரு மேனி
* வியாபாரத்தில் இஸ்லாமியப் பண்பாடுகள்
* இரந்து வாழும் பழக்கம் இல்லாதொழியட்டும்
* சுபிட்சமான சமூகத்துக்கு அத்திவாரமிடுவோம்!
* குடும்பச் சுமை
* இஸ்லாமிய பொருளியலின் தோற்றமும், முதலீட்டு நிறுவனங்களும்
* இஸ்லாம் பற்றிய அநாவசிய பயம்
* நாடறிந்த கல்விமான் மர்ஹூம் மவ்லவி முஹம்மத் புஆத் (பஹ்ஜி)
* அல்-குர்ஆனிய திங்கள்
* மரண தண்டனை ஓர் இஸ்லாமிய நோக்கு
* கட்டுப்பட்டு வாழ நம்மைப் பயிற்றுவித்தது ரமழான்
* பிழையான அக்கீதாக்கள்
* பிறருக்காக இரங்கிய நபி இப்ராஹீம் (அலைஹிஸ் ஸலாம்)
* தலைநகர் கண்ட ஏழு பெரும் விழாக்கள்
* தலைசிறந்த ஆய்வாளர் எம்.எம்.எம். மஹ்ரூப்
* அல்லாஹ் இறக்கி வைத்த தராசு எங்கே?
* ஷூரா இன்றியமையாதது
* அகவை 48
* மவ்லானா அபுல் ஹஸன் அலி அல்-ஹஸனி அல்-நத்வி அவர்களின் கையெழுத்து
* கொழும்பு பெரிய பள்ளிவாசல்
* பத்து ஆண்டுகள் உருண்டோடிவிட்டன
* புதுப் பள்ளி சில நினைவுகள்
* குதிரை மலை
* அஷ்-ஷைக் முஹம்மத் இப்ன் நாசிர் அல்-அப்பூதி
* அப்த் அல்-ஜப்பார் முஹம்மத் ஸனீர்
* இமாம் ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்) அவர்களுடன் சங்கமித்துபோனேன்
* இறுதி நாளன்று இறுதிக் கவிதை
* தூய்மையற்ற நண்பன்
* இலங்கை மலைகளை விளித்த இமாம் ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்)
* பொறாமைக்காரர்களுக்கு இமாம் ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் பொன்னான பதில்
* இலங்கையில் ஷாபிஈ மத்ஹப்
* நல்லன்பு பூணுவோரும் சந்தேகத்துக்கிடமான அன்பு பூணுவோரும்
* பானத் ஸுஆத்
* அக்குறணையே!
* மக்கா மதீனா பஞ்ச நிவாரணம்
* எனது முதல் கட்டுரை
* சகோதரர் ஹாஜா அலாவுதீன் அவர்களின் நூல்கள் வெளியீடு
* 60 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம்
* 1980.03.19 புதன்கிழமை - நெஞ்சம் மறப்பதில்லை
* நிற வெறி
* ஆலிம்கள் ஆங்கிலம் தெரிந்திருப்பது காலத்தின் தேவை
* நாகூர் பள்ளியும் தராவீஹ் தொழுகையில் குர்ஆன் பாராயணமும்
* மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா
* 1980களில் கடிதத் தொடர்புகள் - தொடர் - 01 - நிலைத்து நிற்கும் மனப் பதிவுகள்
* 1980களில் கடிதத் தொடர்புகள் - தொடர் - 02 - முப்பது ஆண்டுகளின் பின் அவரை சந்தித்தேன்
* 1980களில் கடிதத் தொடர்புகள் - தொடர் - 03 - பிரகடனப்படுத்தப்படாத போட்டி
* கொரனா நுண்ணங்கி தாக்குதல் பற்றிய முன்னறிவிப்பு
* மவ்லவி எஸ்.எச். அபுல் ஹஸன் - அவரது மறைவு ஆற்றொனா துயரைத் தருகிறது
* பசி வந்தால் பத்தும் பறக்கும்
* ஹாபில் கலீலுர் ரஹ்மான் ஒரு வியத்தகு பக்கா ஹாபில்
* கடனைச் சுட்டும் கர்ழ் எனும் பதம்
* அறிஞர் சித்தி லெப்பையை வாட்டிய துக்கம்
* செய்யத் முஹம்மத் காக்கா
* இது போன்றதொரு நாளில்தான் அந்தப் பெரியார் விடைபெற்றுக்கொண்டார்
* தரமான அரசியல்வாதிகள்
* தருணத்துக்கு ஏற்ற ஒரு வரலாற்றுச் சம்பவம்
* இரங்கலுக்கு நன்றி
* சிந்தி ! ! !
* ஆழிப் பேரலை - அழியாத தழும்புகளை தடவிப் பார்க்கிறேன்
* சர்வதேச அரபு மொழி தினம் - 2019 - ஒரு விசித்திரமான அனுபவம்
* சர்வதேச அரபு மொழி தினம் - 2019