Articles
அப்த் அல்-ஜப்பார் முஹம்மத் ஸனீர்
இலைமறை காய்
அப்த் அல்-ஜப்பார் முஹம்மத் ஸனீர் என்பது இலங்கையைச் சேர்ந்த ஒரு பெரும் வெளியீட்டாளர், மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், சிந்தனையாளர், சமூக சேவையாளரின் நாமம் என்றால் அது மிகைப்பட்ட கூற்றாகாது.
இலங்கையின் கம்பளையில் பிறந்து தர்கா நகரில் வசித்துவரும் சகோதரர் ஸனீர் ஆழத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ஓர் அமைதியான நதி. 1946.07.19இல் பிறந்த அவர் பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைத் துறையில் பட்டப் படிப்பை நிறைவுசெய்தவர். பின்னர் இலங்கை மத்திய வங்கியில் கடமைபார்த்துவிட்டு சுய விருப்பத்தின் பேரில் இடையில் அப்பதவியிலிருந்து விலகிக்கொண்டார்.
கடந்த பல வருடங்களாக எழுத்து, மொழிபெயர்ப்பு மற்றும் வெளியீட்டு பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தியுள்ள அன்னார் ஒரு சமூக சேவையாளரும்கூட.
ஜனாப் ஸனீர் அவர்களின் எழுத்துக்கள், மொழிபெயர்ப்புக்கள், வெளியீடுகள் பல்துறை சார்ந்தவை. சமூகத்துக்கு பயன் தருபவற்றை தந்துதவிக்கொண்டிருக்கிறார். இவ்வாறு இதுகாறும் வெளிவந்துள்ள நூல்களின் விபரம் கீழே தரப்படுகின்றது:
மூலாதார நூல்களின் அடிப்படையில் முஹம்மத் (ஸல்) அவர்களது வாழ்வு
மார்டின் லிங்ஸ்
Muhammad (Sal) – his life based on the earliest sources
By Martin Lings (Sayyid Abu Bakr Sirajuddin)
நிராகரிப்புக்கும் தீவிரவாதத்துக்கும் மத்தியில் இஸ்லாமிய எழுச்சி
யூஸுப் அல் கர்ளாவி
Islamic Awakening between Rejection and Extremism By Dr. Yusuf al-Qaradawi
குர்ஆனும் ஸுன்னாவும் – கால இட பரிமாணங்கள்
தாஹா ஜாபிர் அல் அல்வானி
Quran and Sunnah : Time – Space factor
By Dr. Taha Jabir al-Alwani
ஹதீஸ் முறைமையும் கிரந்தங்களும்
முஹம்மத் முஸ்தபா அல் அஸமி
Studies in Hadith Methodology and Literature
By Dr. Muhammad Mustafa al-Azami
சர்வதேச உறவுகள் பற்றிய இஸ்லாமிய கோட்பாடு
அப்துல் ஹமீத் அபூ ஸுலைமான்
An Islamic Theory of International Relations
By Dr. Abdul Hamid Abu Sulayman
இஸ்லாமிய சட்டவியலில் பெண்களின் சாட்சியம்
தாஹா ஜாபிர் அல்-அல்வானி
Testimony of Women in Islamic Law
By Dr. Taha Jabir al-Alwani
பெண்களைத் தண்டித்தல்
அப்துல் ஹமீத் அபூ ஸுலைமான்
Marital Discord – Recapturing the full Islamic Spirit of Human Dignity
By Dr. Abdul Hamid Abu Sulayman
முரண்பாடுகள் பற்றிய இஸ்லாமிய ஒழுக்க நெறிகள்
தாஹா ஜாபிர் அல்-அல்வானி
The Ethics of Disagreement in Islam
By Dr. Taha Jabir al-Alwani
இறைதூதர் காலத்து மதீன சமூகம்
அக்ரம் அல் உமரீ
Medinan Society at the Time of The Prophet
By Dr. Akram Diya al-Umari
அறிவைத் தேடுவதன் அவசியம்
யஹ்யா இப்றாஹீம்
Importance of seeking knowledge
By Sheikh Yahya Ibrahim
Supervised translations from English to Tamil and published
முஸ்லிம் இளைஞர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி வழிகாட்டி
ஹிஷாம் அல்-தாலிப் - ( பதிப்பாசிரியர் – ஹாபிஸ் இஸ்ஸதீன்)
A Training Guide for Islamic Workers
By Dr.Hisham al-Taleb
இஸ்லாமிய உலகின் எதிர்காலம்
(மாநாட்டுப் பேருரைகள்)
Futures of the Islamic World
Conference lectures by Dr. Mahdi al-Mandjira, Dr. Mahathir Mohamed
Prof. Sheikh Ali and Sayyid Jamaluddin al-Afghani
இறைதூதர் காட்டிய நெறியில்
ஆதில் ஸலாஹி
Guidance from the Prophet
By Adil Salahi
ஸுன்னாவை அணுகும் முறை
யூஸுப் அல் கர்ளாவி (பீ.எம்.எம். இர்பான்)
Approaching the Sunnah
By Dr. Yusuf al-Qaradawi
பிலால் (ரலி)
எச்.ஏ.எல். க்ரெய்க் (அல் அஸுமத்)
Bilal (Ral)
By HAL Craig
இரு வகை சட்டங்களுக்கிடையில் மனிதன்
அப்துல் ஹமீத் அபூ ஸுலைமான் (பீ.எம்.எம். இர்பான்)
Man between Two Laws : A Qur’anic Perspective in Understanding Self and
Understanding the Other
By Dr. Abdul Hamid A. Abu Sulayman
இஸ்லாமிய நாகரிகம்
அஹ்மத் எஸ்ஸா – உத்மான் அலி (எம்.எல்.எம். ரன்)
Studies in Islamic Civilization
The Muslim Contribution to the renaissance By Ahmad Essa and Othman Ali
ஹதீஸின் ஆதாரபூர்வத் தன்மை
இஸ்ரார் அஹ்மத் கான் (ஏ. ஆர். எம். முபாரக்)
Authentication of Hadith
Redefining the Criteria
By Israr Ahmad Khan
இஸ்லாமியப் பொருளியல் - ஓர் அறிமுகம்
முஹம்மத் அக்ரம் கான் (பின்த் ஹபீஸ்)
An Introduction to Islamic Economics
By Muhammad Akram Khan
இஸ்லாத்தில் மதம் மாறுதல்
தாஹா ஜாபிர் அல்-அல்வானி (ஏ. ஆர். எம் முபாரக்)
Apostasy in Islam
By Taha Jabir al-Alwani
இறைதூதர் முஹம்மத் (ஸல்) அவர்களது காலத்தில் பெண் விடுதலை
அப்துல் ஹலீம் அபூ ஷக்கா (பீ.எம்.எம். இர்பான், அல் அஸுமத்)
Women’s Liberation in the age of The Prophet
(Tahrir alMar’ah)
By Sheikh Abdul Halim Abu Shaqqa
பெற்றார் – பிள்ளை உறவுகள்
ஹிஷாம் அல்-தாலிப், அப்துல் ஹமீத் அபூ ஸுலைமான், ஒமர் அல் தாலிப்
(ஹாபிஸ் இஸ்ஸதீன்)
Parent – Child Relations
By Hisham alTaleb, Abdul Hamid Abu Sulayman and Omar alTaleb
இஸ்லாமிய சட்டவியல் – ஒரு சர்வதேசப் பார்வை
ஸி.ஜீ. வீரமன்த்ரி (ஏ.ஏ.எம். புவாஜி)
Islamic Jurisprudence – An International Perspective
C.G.Weeramantry
அஷ்ஷூறா – கலந்தாலோசித்தல் பற்றிய குர்ஆனிய கோட்பாடு
அஹ்மத் அல் ரைஸூனி (பீ.எம்.எம். இர்பான்)
Al-Shura – The Quranic Principle of Consultation
Ahmad al-Raysuni
வன்முறையும் அரசியல் போராட்டத்தை நிர்வகித்தலும்
அப்துல் ஹமீத் அபூ ஸுலைமான் (பீ.எம்.எம். இர்பான்)
Al-Unf
Abdul Hamid Abu Sulayman
தொழுகையை மீளக் கண்டடைதல்
பஸ்ஸாம் ஸாஈ (பீ.எம்.எம். இர்பான்)
Idaratus Salat
Bassam Saeh
இஸ்லாத்தில் குற்றம் சுமத்தப்பட்டவரின் உரிமைகள் தாஹா ஜாபிர் அல்-அல்வானி (எஸ்.எம். பாரூக்) Rights of the Accused By Taha Jabir al-Alwani
ஹதீஸை ஆதாரப்படுத்தலும் அளவுகோல்களின் மீள்வரையறையும்
இஸ்ரார் அஹ்மத் கான் (எஸ்.எம். பாரூக்)
Authentication of Hadith
Redefining the Criteria
By Israr Ahmad Khan
Authored and Published
அய்மனின் தாய்
Aimanin Thaai
A study on Umm Aiman
Reprinted the following works by late R.P.M. Ghani in Tamil
பாரசிகப் பெருங் கவிஞர்கள்
Great Persian Poets
மௌலானா ரூமியின் கிதாபுல் மஸ்னவி
Kithabul Maznavi of Maulana Rumi
மகாகவி இக்பால்
Iqbal the great Poet
Sponsored In Sinhala Language and published
Muhammad (Sal) – his life based on the earliest sources
Martin Lings (Nazeem Ismail)
இத்தனை பாரமான எழுத்து, மொழிபெயர்ப்பு, வெளியீட்டு வேலைகளுக்கிடையிலும் கல்வி மற்றும் சமூக சேவையிலும் இன்பம் காண்பவர் சகோதரர் ஸனீர் அவர்கள். புலமைப்பரிசில் வழங்கும் அமைப்புக்கள் பலவற்றின் இயக்குநர்களில் ஒருவராக இருந்து ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவிவருகிறார். அவரைச் செயலாளராகக் கொண்டியங்கும் அல்-அக்கில் புலமைப்பரிசில் நிதியம், ஸய்யித் இப்ராஹீம் ஞாபகார்த்த புலமைப்பரிசில், ஹனீமா அக்கடமியா இந்த வகையில் குறிப்பிடத்தக்கவை.
அல்-அக்கில் புலமைப்பரிசில் நிதியம் மூலம் பயன்பெற்றோர் தொகை மிக அதிகம். 1991ஆம் ஆண்டில் 21 மாணவர்களைப் பயனாளிகளாகக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்ட இந்நிதியம் இன்று 240 பயனாளிகளுக்கு உதவிக்கொண்டிருக்கிறது. இதில் 30% முஸ்லிம் அல்லாத மாணவர்கள் என்பது ஈண்டு சொல்லத்தக்கது. இந்நிதியத்தை அதன் ஆரம்பம் முதல் திறமையாக இயக்கிவருகிறார் ஜனாப் ஸனீர்.
அமெரிக்காவில் அமைந்துள்ள International Institute of Islamic Thought மற்றும் இந்தியாவில் அமைந்துள்ள Institute of Objective Studies ஆகிய பெரும் நிறுவனங்களின் இலங்கைக்கான இணைப்பாளராக ஜனாப் ஸனீர் இயங்கிக்கொண்டிருக்கிறார்.
தனது வெளியீட்டுப் பணிக்கு உதவியாக Fuzin Texts என்ற பெயரில் ஒரு வெளியீட்டகத்தை சகோதரர் ஸனீர் நிறுவி, இயக்கிவருகின்றார்.
சகோதரர் ஸனீர் அவர்களிடம் இரத்தத்தில் கலந்துள்ள இலக்கிய ரசனையை அவரோடு சம்பாஷிக்கும்போது நன்கு அவதானிக்கலாம். தமிழ் இலக்கிய சமாச்சாரங்கள் பலவற்றை நான் அன்னார் மூலம் தெரிந்துகொண்டுள்ளேன்.
சகோதரர் ஸனீர் அவர்களின் சர்வதேச தொடர்பு அவரது வாழ்க்கைப் பக்கங்களில் புரட்டப்பட வேண்டிய மற்றுமொரு முக்கிய பகுதியாகும். அன்னாரின் தமிழ், ஆங்கில மொழிப் புலமை இதில் அவருக்கு உதவியாக இருக்கின்றது. இந்தியா, மலேசியா மற்றும் அரபு, ஆங்கில நாடுகளிலுள்ள அறிஞர்களுடன் நெருங்கிய உறவு அவருக்கு உண்டு. இந்தத் தொடர்பை ஜனாப் ஸனீர் பொது மக்களின் நலனுக்காக மட்டும் பயன்படுத்திவருகிறார் என்பதை நான் அறிவேன்.
ஜனாப் ஸனீர் அவர்களுடனான எனது தொடர்பு ஏறத்தாழ இரண்டு தசாப்தங்களைக் கொண்டது. உடலாலும் உள்ளத்தாலும் உயர்ந்த மனிதர், சுறுசுறுப்பானவர், ஓய்வறியாதவர், பழக இனியவர், பண்பாளர், பரந்த வாசிப்பாளர், ஆழமானவர், சீரிய அறிவும் நேரிய நடத்தையும் கொண்டவர், தெளிந்த சிந்தனையும் விரிந்த பார்வையும் உடையவர். எமது சந்திப்புக்கள் யாவும் எப்பொழுதும் அறிவு, ஆராய்ச்சி, இலக்கியம், கல்வி, சமூகம், சமயம், சரித்திரம், பாரம்பரியம், அறிஞர்கள், ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் பற்றியதாகவே இருக்கும்.
தர்கா நகரில் திருமணம் செய்துகொண்ட சகோதரர் ஸனீர் அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். ஒரு மகன். ஒரு மகள். பிள்ளைகள் பாடசாலை மாணவர்களாக இருக்கும்போதே அவரின் மனைவி இறையடி எய்தினார். தாயை இழந்த மக்களை மிகவும் சிரமத்தோடுதான் வளர்த்து ஆளாக்கி இருக்க வேண்டும். பிள்ளைகள் இருவரும் திருமணமாகி சந்தோஷமாக வாழ்கின்றனர். சகோதரர் ஸனீர் ‘அய்மனின் தாய்’ எனும் தனது நூலை அவரின் காலஞ்சென்ற மனைவியின் நினைவில் வெளியிட்டுள்ளமை இங்கு நோக்கற்பாலது.
சகோதரர் ஸனீர் இயல்பாகவே அமைதியானவர். அமைதியை விரும்புபவர். செய்கின்ற தொண்டுகளுக்கு விளம்பரம் விரும்பாதவர். ஆரவாரமின்றி அமைதியாக அவரின் பணிகள் நடைபெறுவதனால் அவரைப் பற்றிய செய்தி ஒரு குறித்த சிறிய வட்டத்துக்குள்ளேயே இன்றுவரை மறைந்துகிடக்கின்றது. இவ்விலைமறை காயான படைப்பாளியையும் அவரின் தன்னலமற்ற சேவைகளையும் ஊரறிய, உலகறியச் செய்ய வேண்டிய கடமையுள்ளது.
ஜனாப் ஸனீர் அவர்களைப் பற்றிய இந்த வரிகளை எழுதும் வேளை அவருடைய அறிமுகத்தை எனக்கு ஏற்படுத்தி தந்த பெரிய மனிதரையும் நான் மறப்பதற்கில்லை. அவர் ஜனாப் ஸனீர் அவர்களின் மைத்துனர் சமூக சேவையாளர் தயாளச் சிந்தை படைத்த அன்சார் ஹாஜியார். அக்குறணை குருகொடையைச் சேர்ந்த இப்பெருமகன் தற்போது தெஹிவளையில் குடும்ப சகிதம் வசித்துவருகிறார். சமூக, சமய, கல்வி, இலக்கிய உறவுகளையும் தாண்டி எங்கள் மூவரதும் குடும்பங்கள் மிக அன்னியோன்யமான உறவு வைத்துள்ளன. இந்த இறுக்கமான உறவை அளித்துள்ள அல்லாஹ் தஆலா நமது உறவுகளை இன்னுமின்னும் அன்புப் பிணைப்பு கொண்டு பலப்படுத்தி இறுதி நாள்வரை நீடிக்கிச்செய்வானாக!
ஜனாப் ஸனீர் அவர்களின் பணிகளை வல்ல அல்லாஹ் ஏற்று, அவற்றுக்கு நிரப்பமான கூலிகளை வழங்கியருள்வானாக! அன்னாருக்கு நீண்ட ஆயுளையும் நிறைவான சுகத்தையும் கொடுப்பானாக! நிம்மதி, மகிழ்ச்சி பொங்கி பிரவகிக்கும் வாழ்க்கையை ஈருலகிலும் அன்னாருக்கு வழங்கி கௌரவிப்பானாக!
அபூ அவ்வாப் ஹனிபா அப்துல் நாஸர்
1439.09.10
2018.05.27
* அருமை நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் எழில் திரு மேனி
* வியாபாரத்தில் இஸ்லாமியப் பண்பாடுகள்
* இரந்து வாழும் பழக்கம் இல்லாதொழியட்டும்
* சுபிட்சமான சமூகத்துக்கு அத்திவாரமிடுவோம்!
* குடும்பச் சுமை
* இஸ்லாமிய பொருளியலின் தோற்றமும், முதலீட்டு நிறுவனங்களும்
* இஸ்லாம் பற்றிய அநாவசிய பயம்
* நாடறிந்த கல்விமான் மர்ஹூம் மவ்லவி முஹம்மத் புஆத் (பஹ்ஜி)
* அல்-குர்ஆனிய திங்கள்
* மரண தண்டனை ஓர் இஸ்லாமிய நோக்கு
* கட்டுப்பட்டு வாழ நம்மைப் பயிற்றுவித்தது ரமழான்
* பிழையான அக்கீதாக்கள்
* பிறருக்காக இரங்கிய நபி இப்ராஹீம் (அலைஹிஸ் ஸலாம்)
* தலைநகர் கண்ட ஏழு பெரும் விழாக்கள்
* தலைசிறந்த ஆய்வாளர் எம்.எம்.எம். மஹ்ரூப்
* அல்லாஹ் இறக்கி வைத்த தராசு எங்கே?
* ஷூரா இன்றியமையாதது
* அகவை 48
* மவ்லானா அபுல் ஹஸன் அலி அல்-ஹஸனி அல்-நத்வி அவர்களின் கையெழுத்து
* கொழும்பு பெரிய பள்ளிவாசல்
* பத்து ஆண்டுகள் உருண்டோடிவிட்டன
* புதுப் பள்ளி சில நினைவுகள்
* குதிரை மலை
* அஷ்-ஷைக் முஹம்மத் இப்ன் நாசிர் அல்-அப்பூதி
* அப்த் அல்-ஜப்பார் முஹம்மத் ஸனீர்
* இமாம் ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்) அவர்களுடன் சங்கமித்துபோனேன்
* இறுதி நாளன்று இறுதிக் கவிதை
* தூய்மையற்ற நண்பன்
* இலங்கை மலைகளை விளித்த இமாம் ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்)
* பொறாமைக்காரர்களுக்கு இமாம் ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் பொன்னான பதில்
* இலங்கையில் ஷாபிஈ மத்ஹப்
* நல்லன்பு பூணுவோரும் சந்தேகத்துக்கிடமான அன்பு பூணுவோரும்
* பானத் ஸுஆத்
* அக்குறணையே!
* மக்கா மதீனா பஞ்ச நிவாரணம்
* எனது முதல் கட்டுரை
* சகோதரர் ஹாஜா அலாவுதீன் அவர்களின் நூல்கள் வெளியீடு
* 60 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம்
* 1980.03.19 புதன்கிழமை - நெஞ்சம் மறப்பதில்லை
* நிற வெறி
* ஆலிம்கள் ஆங்கிலம் தெரிந்திருப்பது காலத்தின் தேவை
* நாகூர் பள்ளியும் தராவீஹ் தொழுகையில் குர்ஆன் பாராயணமும்
* மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா
* 1980களில் கடிதத் தொடர்புகள் - தொடர் - 01 - நிலைத்து நிற்கும் மனப் பதிவுகள்
* 1980களில் கடிதத் தொடர்புகள் - தொடர் - 02 - முப்பது ஆண்டுகளின் பின் அவரை சந்தித்தேன்
* 1980களில் கடிதத் தொடர்புகள் - தொடர் - 03 - பிரகடனப்படுத்தப்படாத போட்டி
* கொரனா நுண்ணங்கி தாக்குதல் பற்றிய முன்னறிவிப்பு
* மவ்லவி எஸ்.எச். அபுல் ஹஸன் - அவரது மறைவு ஆற்றொனா துயரைத் தருகிறது
* பசி வந்தால் பத்தும் பறக்கும்
* ஹாபில் கலீலுர் ரஹ்மான் ஒரு வியத்தகு பக்கா ஹாபில்
* கடனைச் சுட்டும் கர்ழ் எனும் பதம்
* அறிஞர் சித்தி லெப்பையை வாட்டிய துக்கம்
* செய்யத் முஹம்மத் காக்கா
* இது போன்றதொரு நாளில்தான் அந்தப் பெரியார் விடைபெற்றுக்கொண்டார்
* தரமான அரசியல்வாதிகள்
* தருணத்துக்கு ஏற்ற ஒரு வரலாற்றுச் சம்பவம்
* இரங்கலுக்கு நன்றி
* சிந்தி ! ! !
* ஆழிப் பேரலை - அழியாத தழும்புகளை தடவிப் பார்க்கிறேன்
* சர்வதேச அரபு மொழி தினம் - 2019 - ஒரு விசித்திரமான அனுபவம்
* சர்வதேச அரபு மொழி தினம் - 2019