Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Articles

கடனைச் சுட்டும் கர்ழ் எனும் பதம்


கடனைக் குறிக்கும் அரபுப் பதம் 'கர்ழ்' (قرض) ஆகும். ஆதி கால அரபிகள் கடனுக்கு இந்தச் சொல்லை உபயோகித்ததற்கு ஒரு பின்னணி உண்டு. அதாவது கர்ழ் என்பது வெட்டுதல் எனும் பொருள் கொண்டது. கடன் கொடுப்பவன் தன் சொந்தத்திலுள்ள பணத்திலிருந்து ஒரு பகுதியைப் பிரித்தெடுத்து கடன் கேட்டவனுக்கு கொடுப்பதானது தனது பணத்தின் ஒரு பகுதியை வெட்டி எடுத்து கொடுப்பது போல.

தற்காலத்தில் எனக்குத் தோன்றிய ஒரு புதிய விளக்கம். கடன் உறவை வெட்டிவிடுகிறது என்பதனாலும் கர்ழ் எனும் பதம் பொருத்தமாக இருக்கும் என்பதே அந்த விளக்கம். எனது இந்த விளக்கத்துக்கும் கர்ழ் எனும் சொல்லுக்கும் அறவே சம்பந்தம் கிடையாது. அரபு மொழியும் அரபிகளும் என்னை மன்னிக்க வேண்டும். நான் இங்கே சொன்னதெல்லாம் நடப்பதை வைத்து மட்டுமே.

அபூ அவ்வாப் ஹனிபா அப்துல் நாஸர்

1440.06.30
2019.03.08


 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page