Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Articles

பிரகடனப்படுத்தப்படாத போட்டி


1980களில் கடிதத் தொடர்புகள்
தொடர் - 03


1980களில் நான் அரபு மொழியில் கடிதத் தொடர்பு கொண்டிருந்த எனது நண்பர்கள் வட்டத்தில் இன்று நான் அறிமுகம்செய்ய விழையும் தோழர் உடுகொடையைச் சேர்ந்த அஷ்-ஷைக் அக்ரம் (ஹஸனி) அவர்களாவர். மடல் எழுதும் காலத்தில் அவர் உடுகொடை ஹஸனிய்யஹ் அரபுக் கல்லூரியில் பயின்றுகொண்டிருந்தார்.

நண்பர் அக்ரம் அவர்கள் இவ்வழகிய திரு நாடு ஈன்றெடுத்த அறிவுப் பொக்கிஷம் எம்.ஐ. அப்துஸ் ஸமத் ஹழ்ரத் அவர்களிடம் ஹஸனிய்யஹ் அரபுக் கல்லூரியில் கற்றுத் தேரிய ஓர் ஆலிம். ஒரு திறமையான மாணவராக இருந்த தோழர் அக்ரம் அவர்கள் அரபுப் பாiஷயில் அலாதி ஆர்வம் கொண்டவர். அரபு மொழியை அவர் சிறப்பாகக் கையாள்பவராக இருந்ததை அவரின் மாணவப் பருவ அரபுக் கடிதங்கள் சொல்லும். அவரது மடலுக்கு அதைவிட சிறப்பாக பதில் எழுத நான் முனைவேன். எனது மடலைப் படித்துவிட்டு அதனைக்காட்டிலும் சிறப்பாக பதில் எழுத அவர் முனைவார். இப்படியே பிரகடனப்படுத்தப்படாத ஒரு போட்டி எமக்கிடையே கடிதத் தொடர்பாடல் மூலமாக அன்றிருந்தது. எமது அரபு மொழி மற்றும் இலக்கியச் செழுமைக்கு இந்த எழுத்துக்களும் சந்தேகமின்றி இறையருளால் துணைநின்றுள்ளன. தொலைவிலிருந்து எழுதுகிற கடிதங்கள் ஒரு புறமிருக்க அடிக்கடி சந்தித்துக்கொள்கிற வழக்கமும் எம்மிடையே இருந்தது. நான் அவர் வீடு போவதும், அவர் என் வீடு வருவதும் எமது அன்புப் பிணைப்பை இன்னும் இறுக்கமானதாக ஆக்கிவைத்திருந்தன. பின்னர் உயர் கல்வி, தொழில், குடும்பம் என்றானதன் பின் எழுத்துறவும் விடுபட்டு, அடிக்கடி சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பும் அருகிப்போய்விட்டது. எது என்னவானாலும் அஷ்-ஷைக் அக்ரம் அவர்களுடனான அக்கால உறவு இன்றும்கூட நினைக்க தேனாக தித்திக்கின்றது.

நண்பர் அக்ரம் அவர்கள் பல அரபு மத்ரஸாக்களில் உபாத்தியாயராக கடமையாற்றியவர். அவர் மூலம் பல மாணவர்கள் கற்றுத் தேரியிருக்கிறார்கள். அன்பு நண்பர் அக்ரம் அவர்கள் எனக்கு அனுப்பிய மடல்கள் யாவும் பாதுகாப்பாக என்னிடமுள்ளன. அவற்றுள் ஒன்றை இங்கு பதிவேற்றம் செய்துள்ளேன். 1986.09.23 அன்று அவர் இதனை எனக்கு எழுதியுள்ளார். கிட்டத்தட்ட முப்பத்து மூன்றரை ஆண்டுகள் இந்தக் கடிதத்துக்கு.

அஷ்-ஷைக் அக்ரம் குடும்ப சகிதம் பெருவாழ்வு வாழ எந்தன் துஆக்கள்.

அபூ அவ்வாப் ஹனிபா அப்துல் நாஸர்

1441.06.24
2020.02.19


 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page