Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Articles

நிலைத்து நிற்கும் மனப் பதிவுகள்


1980களில் கடிதத் தொடர்புகள்
தொடர் - 01


1980கள் என் வாழ்வில் மிக அதிகம் கடிதம் எழுதிய காலப் பகுதி. 1980முதல் 1992வரை மத்ரஸஹ் வாழ்க்கை. ஊரைவிட்டுத் தூரப்பட்டு கொழும்பு பின்னர் அக்குறணையில் தங்கிப் படித்த காலம் இது. இந்நாட்களில் காணப்படும் நவீன தொலைத்தொடர்பு வசதிகள் அந்நாட்களில் இருக்கவில்லை. சாதாரண தொலைபேசியும் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவு மிக சொற்பமான இடங்களில் மாத்திரமே இருந்தது. எனவே தொலைவிலிருப்போரைத் தொடர்புகொள்ள அன்றிருந்த ஒரேயொரு இலகுவான மார்க்கம் தபால் மட்டுமே.

வீட்டிலிருந்து, உற்றத்தார் சுற்றத்தாரிடமிருந்து தூர இருந்த நானும் மடல் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். தமிழும் அரபும் இம்மடல்களின் மொழிகளாகவிருந்தன. என்னைப் போல் மத்ரஸாக்களில் கற்கும் நண்பர்களுடன் அரபிலேயே கடிதம் எழுதுவேன். இப்படி அரபு மொழி மடல் வட்டமொன்று 1980களின் பின் அரைப் பகுதியில் எனது தொடர்பாடலில் இருந்தது. இந்த நண்பர்கள் இலங்கையின் பல ஊர்களிலுள்ள அரபுக் கல்லூரிகளில் கற்பவர்கள்.

இந்தக் கடிதத் தொடர்பாடல் உண்மையாகவே பல நன்மைகளை நமக்களித்தது. இறுக்கமான அன்புப் பிணைப்பு, தகவல் பரிமாற்றம், கருத்துப் பரிமாற்றம், புதிய தகவல்கள், அறிவு வளர்ச்சி, மொழி விருத்தி, இலக்கியச் செழுமை என இந்நன்மைகளை அடுக்கிக்கொண்டு போகலாம். இத்தனை நன்மைகளும் மெய்யாகவே ஒரு சுகம்தான்.

இக்கால கட்டத்தில் நான் அரபுப் பாiஷயில் கடிதத் தொடர்பு கொண்டிருந்த எனது சிநேகிதர்கள் வட்டத்தில் குறிப்பிடத்தக்க ஒருவர் திகாரியைச் சேர்ந்த அஷ்-ஷைக் அஹ்மத் இம்தியாஸ். அவர் கல்ஹின்னை பத்தாஹ் அரபுக் கல்லூரியில் கற்றுக்கொண்டிருந்தார். 1986.09.11 அன்று அவர் எனக்கு அனுப்பிவைத்த கடிதமொன்றை இங்கே பதிவேற்றியுள்ளேன். தற்போது இந்த மடலுக்கு வயது 33. நான் அக்குறணை ரஹ்மானிய்யஹ் அரபுக் கல்லூரியில் தரம் மூன்றின் ஆரம்பத்தில் இருக்கும்போது அவர் இதனை எழுதியுள்ளார்.

எனது பெற்றார், உறவினர்கள், நண்பர்கள் இன்னும் ஏனையோர் எனக்கெழுதிய மடல்கள் யாவற்றையும் கூடுமானவரை பாதுகாத்துவைத்துள்ளேன். இன் ஷா அல்லாஹ் இனி வரும் நாட்களில் பழைய பசிய நினைவுகளுக்காக அவற்றில் சிலதை தெரிவுசெய்து இங்கே பகிர்ந்துகொள்ளவுள்ளேன்.

அபூ அவ்வாப் ஹனிபா அப்துல் நாஸர்

1441.01.19
2019.09.20


 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page