Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Articles

இலங்கை மலைகளை விளித்த இமாம் ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்)


அறிவுக் கடல், ஆய்வு சமுத்திரம் வையகம் வியந்த மாபெரும் இமாம் ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் இறையடி எய்திய ரஜப் மாத்தில் இருக்கிறோம். இம்மாதத்தின் இருபத்தொன்பதாம் நாளன்று அன்னார் வபாத்தானார்கள்.

இமாம் அவர்களின் அற்புதமான கவிதையொன்று நீண்ட நாட்களின் பின் இன்று அகஸ்மாத்தாக என் பார்வையில் பட்டது, எத்தனை தடவைகள் படித்தாலும் திரும்பத் திரும்ப படிக்கத் தூண்டும் தேன் சொட்டும் கருத்தாழமிக்க நூற்றுக் கணக்கான கவிதைகளின் சொந்தக்காரரான இமாம் அவர்களின் இந்த முத்தான வரிகள் அவர்கள் கொண்டிருந்த திடவுறுதியைப் பளிச்சிடுகின்றன. தித்திக்கும் இவ்வரிகளில் இலங்கையின் மலைகளை இமாம் அவர்கள் விளித்திருப்பது ஈண்டு நோக்கற்பாலது.

இது அந்தக் கவிதை:

أمطري لؤلؤا جبال سرنديب - وفيضي آبار تكرور تبرا
أنا إن عشت لست أعدم قوتا - وإذا مت لست أعدم قبرا
همتي همة الملوك ونفسي - نفس حر ترى المذلة كفرا
وإذاما قنعت بالقوت عمري - فلماذا أزور زيدا وعمرا

மேற்படி கவிதையை தமிழ்ப்படுத்த முயன்றுள்ளேன்.

ஸரந்தீப் மலைகளே! முத்தைக் கொட்டு!
தக்ரூர் கிணறுகளே! தங்கப் பெருக்கெடு!
நான் வாழ்ந்தால் எனக்கு உணவில்லாமலில்லை
நான் மரணித்தால் எனக்கு மண்ணறை இல்லாமலில்லை
என் திடவுறுதி மன்னர்களின் திடவுறுதி
என் மனம் இழிவை இறை நிராகரிப்பாக பார்க்கும் சுதந்திரவானின் மனம்
உணவைக் கொண்டு வாழ்நாளில் நான் திருப்தியுற்றால்
நான் ஏன் ஸைதையும் அம்ரையும் போய் சந்திக்க வேண்டும்


அபூ அவ்வாப் ஹனிபா அப்துல் நாஸர்

1439.07.21
2018.04.09


 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page