Articles
நல்லன்பு பூணுவோரும் சந்தேகத்துக்கிடமான அன்பு பூணுவோரும்
தூய நட்பு பற்றிய இமாம் ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் ஓர் அரபுக் கவிதையை அதன் தமிழ் மொழிபெயர்ப்புடன் நேற்று உங்களுடன் பகிர்ந்துகொண்ட நான் இத்தலைப்பில் அடியேன் யாத்த அரபுக் கவிதை ஒன்றும் உள்ளது. நாளை இன் ஷா அல்லாஹ் அதனைப் பதிவிடுகிறேன் என சொல்லி இருந்தேன். இதோ அந்தக் கவிதை:
لــكـم نــفــوس ورائـي الآن بـعــد جــفـا - لـكـم رجـال جــفــونـي الآن بـعـد صـفـا
وفــي الــرجــال رجــال طـــاب حـــبــهــم - وفــي الــرجـــال رجـــال راب حـــبـــهـــم
غلغـلت في سرب من بالحب يغلبني - أعرضت عن كل من بالحب يـكـذبني
مـا الـحـب إلا صـفـاء الـقـلـب كاللـبـن - بـالـصـدق والـبـذل كـن للـحـب كاللـبـن
هـــل للــوداد بـــقـــاء حــيــن يـــبــتـــعـــد - عــن الـوفــاء وهــو بـالـغـــش يــرتـــعــد
بـالـذب يـــوطـــد بـــيــن الـنـاس ودهـــم - والـخـــذل يـــوهـــن للأحـــبــاب شـــدهــم
صـدري وسـيع لـمن بالـود يـصـدقـنـي - بعـدا لمن كان باسم الحـب يـخـنـقـني
وأســــأل الـلــه لـــبـــا خـــالــــصـــا أبــــدا - أعــــوذ بــالـلــه مـــن حـــب غـــدا زبـــدا
மொழிபெயர்ப்பு:
எத்தனையோ ஜீவன்கள் புறக்கனித்த பின் தற்போது என் பின்னே உள்ளனர்
எத்தனையோ ஆட்கள் தூய்மைக்குப் பின் என்னைப் புறக்கனித்துவிட்டனர்
மனிதர்களில் நல்லன்பு பூணும் மனிதர்களும் உளர்
மனிதர்களில் சந்தேகத்துக்கிடமான அன்பு பூணும் மனிதர்களும் உளர்
அன்பால் என்னை மிகைத்தவரின் இதயத்தில் நான் புகுந்துகொண்டேன்
என்னுடன் போலி அன்புகொண்டவரைப் புறக்கனித்துவிட்டேன்
பால் போன்று இதயம் தூய்மையாக இருப்பதுதான் அன்பு
உண்மை, கொடுத்தல் கொண்டு அன்புக்குரியவனுக்கு நீ செங்கல்லாய் இரு!
நிறைவேற்றலிலிருந்து தூரப்பட்ட அன்பு நீடிக்குமா?
ஏமாற்றல் கொண்டு அன்பு நடுங்குகிறது
ஆதரித்து பேசுவது மூலம் மனிதரிடையே அன்பு பலப்படுத்தப்படுகிறது
கைவிடுவது அன்பர்களின் பலத்தைப் பலகீனப்படுத்துகிறது
என்னுடன் மெய்யன்பு கொண்டவருக்கு என் நெஞ்சு விரிந்துள்ளது
அன்பின் பெயரால் என் குரல்வளையை நெரிப்பவர் தூரப்பட்டு போகட்டும்!
என்றும் தூய்மையான இதயத்தை அல்லாஹ்விடம் கேட்கிறேன்
நுரையான அன்பிலிருந்து அல்லாஹ்வைக் கொண்டு காவல் தேடுகிறேன்
அபூ அவ்வாப் ஹனிபா அப்துல் நாஸர்
1439.07.24
2018.04.12
* அருமை நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் எழில் திரு மேனி
* வியாபாரத்தில் இஸ்லாமியப் பண்பாடுகள்
* இரந்து வாழும் பழக்கம் இல்லாதொழியட்டும்
* சுபிட்சமான சமூகத்துக்கு அத்திவாரமிடுவோம்!
* குடும்பச் சுமை
* இஸ்லாமிய பொருளியலின் தோற்றமும், முதலீட்டு நிறுவனங்களும்
* இஸ்லாம் பற்றிய அநாவசிய பயம்
* நாடறிந்த கல்விமான் மர்ஹூம் மவ்லவி முஹம்மத் புஆத் (பஹ்ஜி)
* அல்-குர்ஆனிய திங்கள்
* மரண தண்டனை ஓர் இஸ்லாமிய நோக்கு
* கட்டுப்பட்டு வாழ நம்மைப் பயிற்றுவித்தது ரமழான்
* பிழையான அக்கீதாக்கள்
* பிறருக்காக இரங்கிய நபி இப்ராஹீம் (அலைஹிஸ் ஸலாம்)
* தலைநகர் கண்ட ஏழு பெரும் விழாக்கள்
* தலைசிறந்த ஆய்வாளர் எம்.எம்.எம். மஹ்ரூப்
* அல்லாஹ் இறக்கி வைத்த தராசு எங்கே?
* ஷூரா இன்றியமையாதது
* அகவை 48
* மவ்லானா அபுல் ஹஸன் அலி அல்-ஹஸனி அல்-நத்வி அவர்களின் கையெழுத்து
* கொழும்பு பெரிய பள்ளிவாசல்
* பத்து ஆண்டுகள் உருண்டோடிவிட்டன
* புதுப் பள்ளி சில நினைவுகள்
* குதிரை மலை
* அஷ்-ஷைக் முஹம்மத் இப்ன் நாசிர் அல்-அப்பூதி
* அப்த் அல்-ஜப்பார் முஹம்மத் ஸனீர்
* இமாம் ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்) அவர்களுடன் சங்கமித்துபோனேன்
* இறுதி நாளன்று இறுதிக் கவிதை
* தூய்மையற்ற நண்பன்
* இலங்கை மலைகளை விளித்த இமாம் ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்)
* பொறாமைக்காரர்களுக்கு இமாம் ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் பொன்னான பதில்
* இலங்கையில் ஷாபிஈ மத்ஹப்
* நல்லன்பு பூணுவோரும் சந்தேகத்துக்கிடமான அன்பு பூணுவோரும்
* பானத் ஸுஆத்
* அக்குறணையே!
* மக்கா மதீனா பஞ்ச நிவாரணம்
* எனது முதல் கட்டுரை
* சகோதரர் ஹாஜா அலாவுதீன் அவர்களின் நூல்கள் வெளியீடு
* 60 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம்
* 1980.03.19 புதன்கிழமை - நெஞ்சம் மறப்பதில்லை
* நிற வெறி
* ஆலிம்கள் ஆங்கிலம் தெரிந்திருப்பது காலத்தின் தேவை
* நாகூர் பள்ளியும் தராவீஹ் தொழுகையில் குர்ஆன் பாராயணமும்
* மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா
* 1980களில் கடிதத் தொடர்புகள் - தொடர் - 01 - நிலைத்து நிற்கும் மனப் பதிவுகள்
* 1980களில் கடிதத் தொடர்புகள் - தொடர் - 02 - முப்பது ஆண்டுகளின் பின் அவரை சந்தித்தேன்
* 1980களில் கடிதத் தொடர்புகள் - தொடர் - 03 - பிரகடனப்படுத்தப்படாத போட்டி
* கொரனா நுண்ணங்கி தாக்குதல் பற்றிய முன்னறிவிப்பு
* மவ்லவி எஸ்.எச். அபுல் ஹஸன் - அவரது மறைவு ஆற்றொனா துயரைத் தருகிறது
* பசி வந்தால் பத்தும் பறக்கும்
* ஹாபில் கலீலுர் ரஹ்மான் ஒரு வியத்தகு பக்கா ஹாபில்
* கடனைச் சுட்டும் கர்ழ் எனும் பதம்
* அறிஞர் சித்தி லெப்பையை வாட்டிய துக்கம்
* செய்யத் முஹம்மத் காக்கா
* இது போன்றதொரு நாளில்தான் அந்தப் பெரியார் விடைபெற்றுக்கொண்டார்
* தரமான அரசியல்வாதிகள்
* தருணத்துக்கு ஏற்ற ஒரு வரலாற்றுச் சம்பவம்
* இரங்கலுக்கு நன்றி
* சிந்தி ! ! !
* ஆழிப் பேரலை - அழியாத தழும்புகளை தடவிப் பார்க்கிறேன்
* சர்வதேச அரபு மொழி தினம் - 2019 - ஒரு விசித்திரமான அனுபவம்
* சர்வதேச அரபு மொழி தினம் - 2019