Articles
மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா
மல்லிகைப் பந்தலில் பார்த்துப் பழகிய அவரை
மனை தேடிப் போய்ப் பார்த்தேன்
'டொமினிக் ஜீவா' தமிழ் இலக்கியப் பரப்பில் இல்லந்தோறும் அடிபடும் பெயர். ஒரு சிறந்த இலக்கியப் படைப்பாளி. தேர்ந்த மேடைப் பேச்சாளர். மல்லிகை மாசிகையின் ஆசிரியர். மல்லிகைப் பந்தல் வெளியீட்டாளர். இலங்கை சாஹித்திய மண்டலப் பரிசு முதன்முதல் பெற்றவர்.
நாலாம் வகுப்புவரையிலான தமிழ் அறிவு கொண்ட எனக்கு சுய வாசிப்புப் பழக்கமே தமிழை வளர்த்துக்கொள்ள இறையருளால் கைகொடுத்தது. நூல்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள், கட்டுரைகள், கவிதைகள் என பலதையும் கருத்தூன்றி படிக்கின்ற வழக்கம் அன்று மட்டுமல்ல இன்றும்தான். இதன் ஓர் அங்கம்தான் திரு டொமினிக் ஜீவா அவர்களின் எழுத்துக்கள். 'எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்' எனும் நாமம் தாங்கிய அன்னாரின் சுயசரிதையை வாசிக்கக் கிடைத்ததைத் தொடர்ந்து அவரின் பல நூல்களைப் படிக்கலானேன். அத்தோடு நிறுத்திக்கொள்ளாது அவர் வெளியிட்டுவந்த மாதாந்த இலக்கிய சஞ்சிகையான மல்லிகை இதழ்களையும் அவரின் மல்லிகைப் பந்தல் வெளியீடுகளையும் விரும்பி விரும்பி வாசித்தேன். என் தமிழை வளர்த்தெடுத்ததில் திரு டொமினிக் ஜீவா அவர்களுக்கும் மல்லிகைப் பந்தலுக்கும் கணிசமான பங்குண்டு.
மல்லிகையின் அந்திம காலம்வரை அதன் சந்தாதாரராகவிருந்த நான் வருடத்துக்கொரு முறை மல்லிகைப் பந்தலுக்குச் சென்று வருவேன். அடுத்த ஆண்டுக்கான மல்லிகைக்கான சந்தாவைச் செலுத்திவிட்டு, மல்லிகைப் பந்தலின் புதிய வெளியீடுகளையும் வாங்கிக்கொள்வேன். நேரம் எடுத்து ஜீவா ஐயாவுடன் உரையாடுவேன். வெட்டிப் பேச்சுக்கள் அல்ல. எல்லாம் இலக்கிய சமாச்சாரங்கள்தான். அவரும் என்னுடன் சளைக்காமல் விருப்பத்துடன் தொடர்ந்து பேசுவார்.
வருடத்துக்கொரு சந்திப்பு, அளவளாவல் என்பதுடன் எமது உறவு மட்டுப்படுத்தப்பட்டதல்ல. இடையிடையே தொலைபேசியூடாகவும் பேசிக்கொள்வோம். நானும் அழைப்பேன். அவரும் அழைப்பார். இலக்கிய விவகாரங்கள் பேசுவோம். மல்லிகை கிரமமாக கிடைக்கிறதா, ஆக்கங்கள் எப்படி இருக்கின்றன, உங்கள் கருத்துக்கள், அவதானங்கள் யாவை என்ற மூன்றும் தொலைபேசியில் ஜீவா ஐயா தப்பாமல் கேட்கும் கேள்விகள்.
ஏதோ எனக்கும் அவர் மீது ஓர் இனம்புரியாத பிடிப்பு. அவருக்கும் என் மீது ஒரு வகை பிடிப்பு. அவரோடு ஒன்றாக அமர்ந்து உரையாடிக்கொண்டிருக்கும் சமயத்தில் மல்லிகைப் பந்தலுக்கு வருவோர் போவோருக்கெல்லாம் என்னைப் பெரிதாக அறிமுகம்செய்து வைப்பார்.
திரு டொமினிக் ஜீவா அவர்கள் நோய்வாய்ப்பட்ட பின் மல்லிகையும் ஓய்ந்தது, மல்லிகைப் பந்தலும் மறைந்தது. ஏறத்தாழ 49 ஆண்டுகள் வெளிவந்த சரித்திரமும் பெருமையும் மல்லிகைக்கு உண்டு. அது ஜீவா எனும் தனிப்பெரும் ஆளுமையின் கடின உழைப்பு, விடாமுயற்சி, இலட்சிய வேட்கை, இலக்கியப் பற்று முதலியவற்றின் பெறுபேறு என்று சொல்லலாம்.
ஜீவா ஐயா நோயுற்று வீட்டோடு அடங்கிய பின் அவரைப் போய்ப் பார்க்க, குசலம் விசாரிக்க சரியாக சந்தர்ப்பம் அமையவில்லை. சென்ற ஞாயிற்றுக்கிழமை 2019.12.15 அன்று அவரில்லம் ஏகி சுகம் விசாரிக்கக் கிடைத்தது. கொழும்பு காக்கைத் தீவில் மகன் திலீபன் இல்லத்தில் இருக்கிறார். என்னுடன் கூட வந்திருந்த என்னரும் புதல்வர் அவ்வாபைப் பார்த்ததும் 'படி படி' என்று கூறினார். அவரின் கட்டுமஸ்தான தேகத்தைக் காண முடியவில்லை. வீரியம் நிறைந்த பேச்சை செவிமடுக்க முடியவில்லை. ஆனால் மிடுக்கான நடையைக் காணக் கிடைத்தது. அருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்த எம்மைப் பார்த்து படம் எடுத்துக்கொள்ளலாமே என்றார் திரு மேமன் கவி. அதையும் செய்துகொண்டோம்.
மேற்படி சந்திப்புக்கான ஏற்பாட்டைச் செய்துதவியர் திரு மேமன் கவி அவர்கள். தனது வேலைப் பளுவுக்கிடையில் எனக்காக நேரம் ஒதுக்கி, என்னோடு கூட வந்து திரு டொமினிக் ஜீவா அவர்களைப் பார்த்துவிட்டு பின்னர் காக்கைத் தீவு கடலோரத்தில் சுகமான மாலைப் பொழுதொன்றையும் எம்மோடு கழித்தார். அவரின் அன்புக்கும், உதவிக்கும் நான் பெரிதும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.
திரு மேமன் கவி அவர்களின் தொலைபேசி இலக்கத்தை எனக்கு கொடுத்துதவிய இரு பெரியவர்களை இங்கே நான் நினைக்காமலிருக்க முடியாது. திரு ஜவாத் மரைக்கார் மற்றும் திரு பீர் முஹம்மத் ஆகிய இலக்கியவாதிகளுக்கு எந்தன் நன்றிகள்.
அபூ அவ்வாப் ஹனிபா அப்துல் நாஸர்
2019.12.22
* அருமை நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் எழில் திரு மேனி
* வியாபாரத்தில் இஸ்லாமியப் பண்பாடுகள்
* இரந்து வாழும் பழக்கம் இல்லாதொழியட்டும்
* சுபிட்சமான சமூகத்துக்கு அத்திவாரமிடுவோம்!
* குடும்பச் சுமை
* இஸ்லாமிய பொருளியலின் தோற்றமும், முதலீட்டு நிறுவனங்களும்
* இஸ்லாம் பற்றிய அநாவசிய பயம்
* நாடறிந்த கல்விமான் மர்ஹூம் மவ்லவி முஹம்மத் புஆத் (பஹ்ஜி)
* அல்-குர்ஆனிய திங்கள்
* மரண தண்டனை ஓர் இஸ்லாமிய நோக்கு
* கட்டுப்பட்டு வாழ நம்மைப் பயிற்றுவித்தது ரமழான்
* பிழையான அக்கீதாக்கள்
* பிறருக்காக இரங்கிய நபி இப்ராஹீம் (அலைஹிஸ் ஸலாம்)
* தலைநகர் கண்ட ஏழு பெரும் விழாக்கள்
* தலைசிறந்த ஆய்வாளர் எம்.எம்.எம். மஹ்ரூப்
* அல்லாஹ் இறக்கி வைத்த தராசு எங்கே?
* ஷூரா இன்றியமையாதது
* அகவை 48
* மவ்லானா அபுல் ஹஸன் அலி அல்-ஹஸனி அல்-நத்வி அவர்களின் கையெழுத்து
* கொழும்பு பெரிய பள்ளிவாசல்
* பத்து ஆண்டுகள் உருண்டோடிவிட்டன
* புதுப் பள்ளி சில நினைவுகள்
* குதிரை மலை
* அஷ்-ஷைக் முஹம்மத் இப்ன் நாசிர் அல்-அப்பூதி
* அப்த் அல்-ஜப்பார் முஹம்மத் ஸனீர்
* இமாம் ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்) அவர்களுடன் சங்கமித்துபோனேன்
* இறுதி நாளன்று இறுதிக் கவிதை
* தூய்மையற்ற நண்பன்
* இலங்கை மலைகளை விளித்த இமாம் ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்)
* பொறாமைக்காரர்களுக்கு இமாம் ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் பொன்னான பதில்
* இலங்கையில் ஷாபிஈ மத்ஹப்
* நல்லன்பு பூணுவோரும் சந்தேகத்துக்கிடமான அன்பு பூணுவோரும்
* பானத் ஸுஆத்
* அக்குறணையே!
* மக்கா மதீனா பஞ்ச நிவாரணம்
* எனது முதல் கட்டுரை
* சகோதரர் ஹாஜா அலாவுதீன் அவர்களின் நூல்கள் வெளியீடு
* 60 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம்
* 1980.03.19 புதன்கிழமை - நெஞ்சம் மறப்பதில்லை
* நிற வெறி
* ஆலிம்கள் ஆங்கிலம் தெரிந்திருப்பது காலத்தின் தேவை
* நாகூர் பள்ளியும் தராவீஹ் தொழுகையில் குர்ஆன் பாராயணமும்
* மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா
* 1980களில் கடிதத் தொடர்புகள் - தொடர் - 01 - நிலைத்து நிற்கும் மனப் பதிவுகள்
* 1980களில் கடிதத் தொடர்புகள் - தொடர் - 02 - முப்பது ஆண்டுகளின் பின் அவரை சந்தித்தேன்
* 1980களில் கடிதத் தொடர்புகள் - தொடர் - 03 - பிரகடனப்படுத்தப்படாத போட்டி
* கொரனா நுண்ணங்கி தாக்குதல் பற்றிய முன்னறிவிப்பு
* மவ்லவி எஸ்.எச். அபுல் ஹஸன் - அவரது மறைவு ஆற்றொனா துயரைத் தருகிறது
* பசி வந்தால் பத்தும் பறக்கும்
* ஹாபில் கலீலுர் ரஹ்மான் ஒரு வியத்தகு பக்கா ஹாபில்
* கடனைச் சுட்டும் கர்ழ் எனும் பதம்
* அறிஞர் சித்தி லெப்பையை வாட்டிய துக்கம்
* செய்யத் முஹம்மத் காக்கா
* இது போன்றதொரு நாளில்தான் அந்தப் பெரியார் விடைபெற்றுக்கொண்டார்
* தரமான அரசியல்வாதிகள்
* தருணத்துக்கு ஏற்ற ஒரு வரலாற்றுச் சம்பவம்
* இரங்கலுக்கு நன்றி
* சிந்தி ! ! !
* ஆழிப் பேரலை - அழியாத தழும்புகளை தடவிப் பார்க்கிறேன்
* சர்வதேச அரபு மொழி தினம் - 2019 - ஒரு விசித்திரமான அனுபவம்
* சர்வதேச அரபு மொழி தினம் - 2019