Articles
எனது முதல் கட்டுரை
இந்தப் படத்தில் நீங்கள் காண்பது அடியேன் முதன்முதலாக எழுதிய கட்டுரையாகும். ‘இஸ்லாமிய தஃவாவை முன்கொண்டு செல்வதில் ஆலிம்களின் வகிபங்கு’ எனும் தலைப்பில் அரபு மொழியில் அதனை யாத்திருந்தேன். மக்காவில் உள்ள முஸ்லிம் உலக அமைப்பு (Muslim World League) தனது வாராந்த அரபு பத்திரிகையான ‘அக்பார் அல்-ஆலம் அல்-இஸ்லாமி’ல் 1988.07.04 அன்று இந்தக் கட்டுரையை பிரசுரித்திருந்தது.
மேற்படி கட்டுரையை நான் எழுதியதும், அது பத்திரிகையில் வெளிவந்ததும் நான் மத்ரஸாவில் தரம் நான்கில் பயின்றுகொண்டிருந்த காலப் பகுதியிலாகும். அக்பார் அல்-ஆலம் அல்-இஸ்லாமி ஒரு சர்வதேச தரம் வாய்ந்த அரபுப் பத்திரிகை. பல்கலைக்கழக கற்கைகள் அல்லது அவற்றுக்கு நிகரான கற்கைகளைப் பூர்த்திசெய்தவர்களின் கட்டுரைகளுக்கு மாத்திரமே அக்காலத்தில் இடமளிக்கும் அந்தப் பத்திரிகை ஒரு சின்ன கல்லூரி மாணவனுடைய கட்டுரையை முக்கிய இடம்கொடுத்து ஒரு முழுப் பக்க கட்டுரையாக பிரசுரித்திருந்தமையைக் கண்டபோது முதலில் என்னையே நான் நம்பவில்லை. நான் என் கைப்பட எழுதி அனுப்பிவைத்த அக்கட்டுரையில் ஒரு வரியைக்கூட குறைக்காமல், திருத்தம் ஏதும் செய்யாமல் பொருத்தமான படங்களும் இணைத்து பிரசுரித்தனர். ஆனால் என் பெயர் மட்டும் அதில் வெளியிடப்படவில்லை. இது தவறுதலாக நடந்ததா அல்லது இந்தப் பத்திரிகையில் எழுதும் அளவுக்கு எதிர்பார்க்கப்படும் தகுதி இந்தக் கட்டுரையாளரிடம் இல்லை என்பதனாலா என்பது தெரியவில்லை. பெயர் குறிப்பிடப்படாமை குறித்து பத்திரிகை ஆசிரியருக்கு அப்போதே எழுதினேன். ஒன்றும் நடக்கவில்லை.
அக்பார் அல்-ஆலம் அல்-இஸ்லாமி கட்டுரைகளின் உள்ளடக்கத்தின் தரத்தையும் மொழியின் தரத்தையும் பேணிவந்த ஒரு பத்திரிகை. உள்ளடக்கத்தின் தரமோ, மொழியின் தரமோ குறைந்த கட்டுரைகளை அந்தப் பத்திரிகையில் அந்தக் காலத்தில் பொதுவாக காண முடியாது. சின்ன வயதில் தரம் நான்கில் அரபு மொழியை இரண்டாம் மொழியாக படித்துக்கொண்டிருக்கும் காலத்தில் எனது நீண்ட கட்டுரையொன்று இப்படியொரு பத்திரிகையில் வெளிவந்தமையை எனது எழுத்துக்கு அருளாளன் அல்லாஹ் அளித்த உயர்ந்த அங்கீகாரமாக நம்பிக்கொண்டதோடு இதற்குப் பிறகு பயப்படாமல் எழுதலாம் எனும் தைரியத்தையும் அது எனக்கு கொடுத்தது. அல்-ஹம்து லில்லாஹ்.
சுமார் 31 வருடங்களுக்கு முன் எழுதிய இந்தக் கட்டுரையே அரபிலும் சரி பிற பாஷைகளிலும் சரி அடியேன் எழுதிய முதல் கட்டுரையாகும்.
அஷ்-ஷைக் அபூ அவ்வாப் ஹனிபா அப்துல் நாஸர்
1441.01.13
2019.09.14
* அருமை நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் எழில் திரு மேனி
* வியாபாரத்தில் இஸ்லாமியப் பண்பாடுகள்
* இரந்து வாழும் பழக்கம் இல்லாதொழியட்டும்
* சுபிட்சமான சமூகத்துக்கு அத்திவாரமிடுவோம்!
* குடும்பச் சுமை
* இஸ்லாமிய பொருளியலின் தோற்றமும், முதலீட்டு நிறுவனங்களும்
* இஸ்லாம் பற்றிய அநாவசிய பயம்
* நாடறிந்த கல்விமான் மர்ஹூம் மவ்லவி முஹம்மத் புஆத் (பஹ்ஜி)
* அல்-குர்ஆனிய திங்கள்
* மரண தண்டனை ஓர் இஸ்லாமிய நோக்கு
* கட்டுப்பட்டு வாழ நம்மைப் பயிற்றுவித்தது ரமழான்
* பிழையான அக்கீதாக்கள்
* பிறருக்காக இரங்கிய நபி இப்ராஹீம் (அலைஹிஸ் ஸலாம்)
* தலைநகர் கண்ட ஏழு பெரும் விழாக்கள்
* தலைசிறந்த ஆய்வாளர் எம்.எம்.எம். மஹ்ரூப்
* அல்லாஹ் இறக்கி வைத்த தராசு எங்கே?
* ஷூரா இன்றியமையாதது
* அகவை 48
* மவ்லானா அபுல் ஹஸன் அலி அல்-ஹஸனி அல்-நத்வி அவர்களின் கையெழுத்து
* கொழும்பு பெரிய பள்ளிவாசல்
* பத்து ஆண்டுகள் உருண்டோடிவிட்டன
* புதுப் பள்ளி சில நினைவுகள்
* குதிரை மலை
* அஷ்-ஷைக் முஹம்மத் இப்ன் நாசிர் அல்-அப்பூதி
* அப்த் அல்-ஜப்பார் முஹம்மத் ஸனீர்
* இமாம் ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்) அவர்களுடன் சங்கமித்துபோனேன்
* இறுதி நாளன்று இறுதிக் கவிதை
* தூய்மையற்ற நண்பன்
* இலங்கை மலைகளை விளித்த இமாம் ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்)
* பொறாமைக்காரர்களுக்கு இமாம் ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் பொன்னான பதில்
* இலங்கையில் ஷாபிஈ மத்ஹப்
* நல்லன்பு பூணுவோரும் சந்தேகத்துக்கிடமான அன்பு பூணுவோரும்
* பானத் ஸுஆத்
* அக்குறணையே!
* மக்கா மதீனா பஞ்ச நிவாரணம்
* எனது முதல் கட்டுரை
* சகோதரர் ஹாஜா அலாவுதீன் அவர்களின் நூல்கள் வெளியீடு
* 60 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம்
* 1980.03.19 புதன்கிழமை - நெஞ்சம் மறப்பதில்லை
* நிற வெறி
* ஆலிம்கள் ஆங்கிலம் தெரிந்திருப்பது காலத்தின் தேவை
* நாகூர் பள்ளியும் தராவீஹ் தொழுகையில் குர்ஆன் பாராயணமும்
* மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா
* 1980களில் கடிதத் தொடர்புகள் - தொடர் - 01 - நிலைத்து நிற்கும் மனப் பதிவுகள்
* 1980களில் கடிதத் தொடர்புகள் - தொடர் - 02 - முப்பது ஆண்டுகளின் பின் அவரை சந்தித்தேன்
* 1980களில் கடிதத் தொடர்புகள் - தொடர் - 03 - பிரகடனப்படுத்தப்படாத போட்டி
* கொரனா நுண்ணங்கி தாக்குதல் பற்றிய முன்னறிவிப்பு
* மவ்லவி எஸ்.எச். அபுல் ஹஸன் - அவரது மறைவு ஆற்றொனா துயரைத் தருகிறது
* பசி வந்தால் பத்தும் பறக்கும்
* ஹாபில் கலீலுர் ரஹ்மான் ஒரு வியத்தகு பக்கா ஹாபில்
* கடனைச் சுட்டும் கர்ழ் எனும் பதம்
* அறிஞர் சித்தி லெப்பையை வாட்டிய துக்கம்
* செய்யத் முஹம்மத் காக்கா
* இது போன்றதொரு நாளில்தான் அந்தப் பெரியார் விடைபெற்றுக்கொண்டார்
* தரமான அரசியல்வாதிகள்
* தருணத்துக்கு ஏற்ற ஒரு வரலாற்றுச் சம்பவம்
* இரங்கலுக்கு நன்றி
* சிந்தி ! ! !
* ஆழிப் பேரலை - அழியாத தழும்புகளை தடவிப் பார்க்கிறேன்
* சர்வதேச அரபு மொழி தினம் - 2019 - ஒரு விசித்திரமான அனுபவம்
* சர்வதேச அரபு மொழி தினம் - 2019