Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Articles

நாகூர் பள்ளியும்
தராவீஹ் தொழுகையில் குர்ஆன் பாராயணமும்


புத்தளம் கடற்கரைப் பிரதேசத்தை அழகுசெய்வதில் அங்கே அமைந்துள்ள இறையில்லங்களுக்கு மகத்தான பங்குண்டு. அத்தகைய இறையியல்லங்களில் ஒன்று நாகூர் மஸ்ஜித்.

இப்படத்தில் நீங்கள் பார்ப்பது நாகூர் பள்ளியின் பழைய தோற்றமாகும். தற்போதைய புதிய கட்டடம் போன்றல்லாது ஒரு சிறிய கட்டிடமாக அது இருந்தது. சிறிதாக இருந்தாலும் அதன் அழகுக்கு குறைவில்லை.

இந்தப் பள்ளிவாசலுக்கு ஒரு நீண்ட வரலாறும் சிறப்பும் உண்டு. புத்தளம் நகர மஸ்ஜித்களில் ரமழான் மாத தராவீஹ் தொழுகையில் முழு குர்ஆனையும் ஓதித் தொழுவிக்கும் நடைமுறை நாகூர் பள்ளியிலேயே ஆரம்பமானது. இது இந்த மஸ்ஜிதின் சிறப்புகளுள் குறிப்பிடத்தக்க ஒன்று.

1987ஆம் ஆண்டு ரமழானில் இங்கே நீங்கள் காண்கின்ற முன்னாள் கட்டடத்தில் தராவீஹ் தொழுகையில் முப்பது ஜுஸ்உகளும் ஓதி தொழுவிக்கப்பட்டது. இந்த நல்ல வேலையைச் செய்யும் பாக்கியம் கிடைக்கப்பெற்றவன் என்ற வகையில் அல்லாஹ் தஆலாவைப் புகழ்ந்து அவனுக்கு நன்றி சொல்கிறேன்.

தராவீஹ் தொழுகையை ஒரு ஹாபில் கொண்டு முழு குர்ஆனையும் பாராயணம் செய்து தொழ வேண்டும் என்ற அவாவுடன் என்னை அணுகி சம்மதம் பெற்றுக்கொண்டு நாகூர் பள்ளியின் நிர்வாகத்தை இந்த வேலைக்காக இயங்கவைத்த பெருமையும் நன்மையும் மர்ஹூம் சைக் மதார் ஹழ்ரத்தைச் சாரும். கடற்கரைப் பிரதேசத்தில் முடிசூடா மன்னனாக திகழ்ந்த சின்ன ஹழ்ரத் அவர்களின் சொல்லை அப்பகுதி மக்கள் பொதுவாக மறுப்பின்றி ஏற்றுக்கொள்வர். இந்த விடயத்திலும் அதுவே நடந்தது. அருளாளன் அல்லாஹ் அன்னாருக்கு அருள் பாலிப்பானாக!

தராவீஹ் தொழுகையில் முப்பது ஜுஸ்உகளையும் ஓதித் தொழுவிக்கும் வழமை புத்தளம் நகரப் பள்ளிவாசல்களில் இன்றிருக்கின்றதென்றால் அதன் முன்னோடி நாகூர் மஸ்ஜித் ஆகும்.

அபூ அவ்வாப் ஹனிபா அப்துல் நாஸர்

1441.05.12
2020.01.08


 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page