Felicitations
புத்தளம் அல்-குல்லிய்யத் அல்-இஸ்லாஹிய்யஹ் பட்டமளிப்பு விழா நினைவு மலர் - 2006
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச்
செயலாளர்
அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர் அவர்களின் ஆசிச் செய்தி
தனது சொந்த வரலாற்றின் பதினெட்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வேளையில் மூன்றாவது பட்டமளிப்பு விழாவையும் நடாத்தும் புத்தளம் இஸ்லாஹிய்யஹ் பெண்கள் சன்மார்க்கக் கலாபீடத்துக்கு என் நல்லாசிகளை வழங்குவதில் புளகாங்கிதமடைகிறேன்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் கல்வியைப் பொதுவாக்கி வைத்த ஒரு விழுமிய மார்க்கத்தைப் பின்பற்றிக்கொண்டும் பெண் கல்வியின்பால் மிகக் குறைந்த ஆர்வத்தையே காட்டிவரும் முஸ்லிம் சமூகத்தில் சன்மார்க்கக் கல்வியுடன் பின்னிப்பிணைந்ததாய் பொதுக் கல்வியையும் பெண்ணினத்துக்குப் புகட்டும் கற்கைநெறியை வகுத்து நடைமுறைப்படுத்துவதை இஸ்லாஹிய்யாவின் சிறப்பான அம்சமாக நான் காண்கிறேன். அது காலத்தின் அவசியத் தேவை என்பதை மறுத்துரைக்க முடியாது.
உருண்டோடிவிட்ட 17 ஆண்டுகளில் 210 இஸ்லாமிய பெண் மார்க்க அறிஞர்களை உருவாக்கி நாட்டின் நாலா பக்கங்களுக்கும் இஸ்லாஹிய்யாவினால் அனுப்ப முடிந்துள்ளதாக எனக்குக் கிடைத்த தகவல் என்னை மிக மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. இந்த ஆலிமாக்கள் மார்க்கக் கல்வியுடன் பொதுக் கல்வியையும் புத்தளம் மண்ணிலிருந்து எடுத்துச் சென்றுள்ளார்கள் என்றால் புத்தள மண்ணின் மைந்தன் என்ற வகையில் பெருமிதம் தாளாது பூரித்துப் போகிறேன்.
இது இஸ்லாஹிய்யாவின் வரலாற்றில் ஒரு சாதனை என்றால் அச்சாதனைக்குப் பின்னால் மிகப் பெரும் சவால்களும் நிச்சயமாக நிறைந்துதான் இருக்க வேண்டும். தடைகளைச் சந்திக்கும்போது ஏற்படும் சோர்வு அவற்றைத் தாண்டிச் சென்று ஓர் இலக்கை அடையும்போது ஏற்படும் இன்பத்தின் முன் கரைந்துருகிப் போகும் என்ற யதார்த்தத்தை இஸ்லாஹிய்யாவின் நிருவாகமும், ஆசிரியர் குழாமும் நன்கு உணர்ந்திருக்கும் என்பது எனது திடமான நம்பிக்கை.
கடந்து போனதோ அற்ப பதினேழுகள்தான். ஆனால் இவ்வறிவுப்பீடம் சந்திக்கப்போவது யுகங்களாயிருக்கலாம். தனக்கென அது அமைத்துக்கொண்ட இலக்கை நோக்கி தன்னம்பிக்கையுடன் பயணிக்க வேண்டுமென நெஞ்சார வாழ்த்தி, வல்லவனிடம் பிரார்த்திக்கவும் செய்கிறேன்.
229/47, 11ஆம் குறுக்குத் தெரு,
புத்தளம்.
2006.08.15

-
நினைவு மலர்கள்
* கிண்ணியா அல்-குல்லிய்யத்துஸ் ஸஃதிய்யஹ் பட்டமளிப்பு விழா நினைவு மலர் - 2004
* பொலன்னறுவை அல்-குல்லிய்யத்துல் மஜீதிய்யஹ் பட்டமளிப்பு விழா நினைவு மலர் - 2006
* புத்தளம் அல்-குல்லிய்யத்துல் இஸ்லாஹிய்யஹ் பட்டமளிப்பு விழா நினைவு மலர் - 2006
* கல்ஹின்னை ஜாமிஅத்துல் பத்தாஹ் பட்டமளிப்பு விழா நினைவு மலர் - 2007
* அலவத்துகொட மத்ரஸத்து பரீரஹ் நினைவு மலர் - 2007
* ஏறாவூர் கைரிய்யஹ் அரபுக் கல்லூரி முதலாவது பட்டமளிப்பு விழா நினைவு மலர் - ஹி.பி. 1428 கி.பி. 2007
* கொழும்பு இஹ்ஸானிய்யஹ் அரபுக் கல்லூரி இரண்டாவது பட்டமளிப்பு விழா நினைவு மலர் - 2008
* பதுளை பஹ்மிய்யஹ் அரபுக் கல்லூரி ஐந்தாவது பட்டமளிப்பு விழா நினைவு மலர் - 2009
* அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா - முல்லைத்தீவு மாவட்டக் கிளையின் 25 ஆண்டு நிறைவு நினைவு மலர் - ஹி.பி. 1430 கி.பி. 2009
* புத்தளம் குல்லிய்யத் மன்பஃ அல்-சாலிஹாத் பட்டமளிப்பு விழா நினைவு மலர் - 2013
* புத்தளம் குல்லிய்யத் இஹ்யாஃ அல்-உலூம் பட்டமளிப்பு விழா நினைவு மலர் - 2013
பெருநாள் வாழ்த்துச் செய்திகள்
* ஈத் அல்-பித்ர் - ஹி.பி. 1424 கி.பி. 2003
* ஹஜ் பெருநாள் - ஹி.பி. 1424 கி;.பி. 2004
* ஈத் அல்-பித்ர் - ஹி.பி. 1425 கி.பி. 2004
* ஈத் அல்-பித்ர் - ஹி.பி. 1426 கி.பி. 2005
* ஈத் அல்-அழ்ஹா - ஹி.பி. 1426 கி.பி. 2006
* ஈத் அல்-பித்ர் - ஹி.பி. 1427 கி.பி. 2006
* ஈத் அல்-அழ்ஹா - ஹி.பி. 1427 கி.பி. 2006
* ஈத் அல்-பித்ர் - ஹி.பி. 1428 கி.பி. 2007
சமூகம் சார்ந்தவை
* உள்நாட்டு யுத்தம் முடிவு - 2009
* பங்கொல்லாமட அல்-ஹிலால் பொதுநல அமைப்பின் இஸ்லாமிய தினவிழா - ஹி.பி. 1431 கி.பி 2010
பத்திரிகை
* எங்கள் தேசம் பத்திரிகை 100ஆவது இதழ் – 2007
* இத்திஹாத் அல்-நூரிய்யீனின் அல்-கலம் காலாண்டு சஞ்சிகை - 2012