Felicitations
ஈத் அல்-அழ்ஹா - ஹி.பி. 1427 கி.பி. 2006
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பொதுச் செயலாளர்
அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர் அவர்களின்
ஈத் அல்-அழ்ஹா வாழ்த்துச் செய்தி
இறைத் தூதர் இப்ராஹீம் (அலைஹிஸ் ஸலாத்து வஸ்ஸலாம்), அவர்களின் அன்பு புத்திரர் இஸ்மாயீல் (அலைஹிஸ் ஸலாத்து வஸ்ஸலாம்), அவ்விருவருமாக மேற்கொள்ளவிருந்த தியாகத்தின்பால் அவர்களுக்கிருந்த மனநிலை ஆகியவற்றின் அழியாத நினைவுகளுடன் மற்றுமொரு காலைப் பொழுது விடிகிறது.
அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று அவனுக்காக தன்னை அறுத்துப் பலியிடவிருக்கும் தன் தந்தையின் திடசங்கற்பத்தைக் கேட்டபோது இஸ்மாயீல் (அலைஹிஸ் ஸலாத்து வஸ்ஸலாம்) அவர்களின் மனதில் நிலவிய சகிப்புத் தன்மைதான் ஈத் அல்-அழ்ஹா பிரதி வருடமும் நமக்குக் கொண்டுவரும் செய்தி. இறைத் தூதர் இப்பராஹீம் (அலைஹிஸ் ஸலாத்து வஸ்ஸலாம்), அன்னாரின் அருமை மைந்தர் ஆகியோரின் தியாகமும், சகிப்புத் தன்மையும் தான் ஒவ்வொரு முஸ்லிமிடமிருந்தும் அவனது வாழ்வின் ஒவ்வோர் அம்சத்திலும் எதிர்பார்க்கப்படுகிறது.
இறைத்தூதர் இப்ராஹீம் (அலைஹிஸ் ஸலாத்து வஸ்ஸலாம்) அவர்கள் குடும்பத்து அத்தியாகம் உண்மையிலேயே ஈதுல் அழ்ஹாவுக்கு ஒரு தனிச் சிறப்பை ஏற்படுத்தி நிற்கிறது.
பல திரு வனசனங்களில் புனித குர்ஆன் நபி இப்ராஹீம் (அலைஹிஸ் ஸலாத்து வஸ்ஸலாம்) அவர்களை தனது இரட்சகனுக்கு முழுக்க முழுக்க கட்டுப்பட்ட ஓர் உண்மை முஸ்லிம் என்று வர்ணிக்கிறது. அனைத்துத் தருணங்களிலும், சந்தர்ப்பங்களிலும் அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவதே இஸ்லாமாகும். இப்ராஹீம் (அலைஹிஸ் ஸலாத்து வஸ்ஸலாம்) அவர்களின் வாழ்வு பற்றிய இறை வசனங்கள் புனித அல்-குர்ஆனில் நிறைந்திருக்கின்றன. அவை இம்மகிழ்ச்சிமிக்க நன் நாளிலே ஒவ்வொரு முஸ்லிமினதும் முழுக் கவனத்தையும் ஈர்த்து நிற்கட்டும்.
தியாகச் செம்மல் இப்ராஹீம் (அலைஹிஸ் ஸலாத்து வஸ்ஸலாம்) அவர்களை அலங்கரித்து நின்ற அவர்களது விருந்தோம்பலை இம்மங்கலகரமான நாளிலே நாம் அனைவரும் நினைவுகூருவோமாக! வரலாற்றுப் பக்கங்களில் ‘விருந்தாளிகளின் தந்தை’ என்ற செல்லப் பெயருடன் அவரின் செழுமையான விருந்தோம்பும் பண்பு பதிக்கப்பட்டுள்ளது.
சகல முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கும் என் சார்பாகவும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சார்பாகவும் நெஞ்சம் நிறைந்த, உளங்கனிந்த ஈதுல் அழ்ஹா நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இப்பொருநாளின் மகிழ்வு உலகம் பூராவும் வியாபித்து இறை பக்தி, மனச் சாந்தியுடன் முஸ்லிம்களை ஐக்கியப்படுத்துவதாக! முஸ்லிம்களின் இதயங்களிலே உண்மையான சகோதர வாஞ்சையை ஏகன் அல்லாஹ் ஏற்படுத்துவானாக!
ஈத் முபாரக்!
அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர்
பொதுச் செயலாளர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
2006.12.28

-
நினைவு மலர்கள்
* கிண்ணியா அல்-குல்லிய்யத்துஸ் ஸஃதிய்யஹ் பட்டமளிப்பு விழா நினைவு மலர் - 2004
* பொலன்னறுவை அல்-குல்லிய்யத்துல் மஜீதிய்யஹ் பட்டமளிப்பு விழா நினைவு மலர் - 2006
* புத்தளம் அல்-குல்லிய்யத்துல் இஸ்லாஹிய்யஹ் பட்டமளிப்பு விழா நினைவு மலர் - 2006
* கல்ஹின்னை ஜாமிஅத்துல் பத்தாஹ் பட்டமளிப்பு விழா நினைவு மலர் - 2007
* அலவத்துகொட மத்ரஸத்து பரீரஹ் நினைவு மலர் - 2007
* ஏறாவூர் கைரிய்யஹ் அரபுக் கல்லூரி முதலாவது பட்டமளிப்பு விழா நினைவு மலர் - ஹி.பி. 1428 கி.பி. 2007
* கொழும்பு இஹ்ஸானிய்யஹ் அரபுக் கல்லூரி இரண்டாவது பட்டமளிப்பு விழா நினைவு மலர் - 2008
* பதுளை பஹ்மிய்யஹ் அரபுக் கல்லூரி ஐந்தாவது பட்டமளிப்பு விழா நினைவு மலர் - 2009
* அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா - முல்லைத்தீவு மாவட்டக் கிளையின் 25 ஆண்டு நிறைவு நினைவு மலர் - ஹி.பி. 1430 கி.பி. 2009
* புத்தளம் குல்லிய்யத் மன்பஃ அல்-சாலிஹாத் பட்டமளிப்பு விழா நினைவு மலர் - 2013
* புத்தளம் குல்லிய்யத் இஹ்யாஃ அல்-உலூம் பட்டமளிப்பு விழா நினைவு மலர் - 2013
பெருநாள் வாழ்த்துச் செய்திகள்
* ஈத் அல்-பித்ர் - ஹி.பி. 1424 கி.பி. 2003
* ஹஜ் பெருநாள் - ஹி.பி. 1424 கி;.பி. 2004
* ஈத் அல்-பித்ர் - ஹி.பி. 1425 கி.பி. 2004
* ஈத் அல்-பித்ர் - ஹி.பி. 1426 கி.பி. 2005
* ஈத் அல்-அழ்ஹா - ஹி.பி. 1426 கி.பி. 2006
* ஈத் அல்-பித்ர் - ஹி.பி. 1427 கி.பி. 2006
* ஈத் அல்-அழ்ஹா - ஹி.பி. 1427 கி.பி. 2006
* ஈத் அல்-பித்ர் - ஹி.பி. 1428 கி.பி. 2007
சமூகம் சார்ந்தவை
* உள்நாட்டு யுத்தம் முடிவு - 2009
* பங்கொல்லாமட அல்-ஹிலால் பொதுநல அமைப்பின் இஸ்லாமிய தினவிழா - ஹி.பி. 1431 கி.பி 2010
பத்திரிகை
* எங்கள் தேசம் பத்திரிகை 100ஆவது இதழ் – 2007
* இத்திஹாத் அல்-நூரிய்யீனின் அல்-கலம் காலாண்டு சஞ்சிகை - 2012