Felicitations
ஈத் அல்-பித்ர் - ஹி.பி. 1427 கி.பி. 2006
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பொதுச் செயலாளர்
அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர் அவர்களின்
ஈத் அல்-பித்ர் வாழ்த்துச் செய்தி
மற்றுமொரு ரமழான் எம்மிடம் விடைபெற்றுக் கொள்கிறது. எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்காக வேண்டி மனித உணர்ச்சிகளை தியாகம் செய்யும், சமூகத்திற்காக சுயநலத்தைத் தியாகம் செய்யும், சக மனிதருக்காக தனது பேராசையைத் தியாகம் செய்யும் இறை செய்தியை எமக்கென விட்டு விட்டு விடைபெறுகிறது. ஆண்டுக்குப் பின் ஆண்டு அது விட்டுச் செல்லும் செய்தி அதுதான். அந்த செய்தி தன் படைப்பினத்தால் கடைப்பிடித்தொழுகப்பட வேண்டும் என்பது படைப்பாளியின் எதிர்பார்ப்பாகும்.
கடந்த ஒரு மாத காலமாக நாம் பகற்போதில் தவிர்த்துக்கொண்டிருந்த உணவு உள்ளிட்ட இதர தேவைகளை அனுபவிக்கும் நாளிதுவாகும். அது போலவே இக்காலப் பகுதியில் நாம் எவற்றைக் கற்றோமோ அவற்றை செயலிற் காட்டும் நேரமாகவும் அமைகிறது. நாம் கற்ற அவை சகிப்புத் தன்மை, பரஸ்பர புரிந்துணர்வு, பரோபகாரம் முதலானவையாகும்.
மூதூரிலும், தோப்பூரிலும் இன்னும் இந்நாட்டின் பல்வேறு இடங்களிலுள்ள அகதி முகாம்களிலும் சொல்லொனா துன்பத்தை அனுபவித்துவரும் குறிப்பிடத்தக்க பெருந்தொகையான மக்கள் இந்நாளில் நன்கு உண்டு, நன்கு உடுத்தியிருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஈகைக் கரங்களை நீட்ட வேண்டிய தருணமாகவும் இது அமைகிறது. சந்தேகத்துக்கிடமின்றி இக்கைங்கரியம் முஸ்லிம் சகோதர, சகோதரிகளால் செய்யப்பட்டு வருகிறது என்பது உண்மையாகும். ஆயினும் அது இடையூறின்றித் தொடர வேண்டும். பட்டினி, பஞ்சத்துக்கெதிரான இஸ்லாம் காட்டித்தரும் யுத்தமாகவும் அது அமைகிறது. இத்தினத்திலே தன் ஏழைச் சகோதரன் மஸ்ஜிதுக்குச் செல்லும் பொழுது பட்டினி வயிற்றோடு பழைய ஆடையில் செல்லாதிருக்க உணவு, உடை வழங்க வேண்டிய கடமை ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உண்டு.
முஸ்லிம் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் மனமார்ந்த பெருநாள் நல் வாழ்த்துக்களை என் சார்பிலும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சார்பிலும் தெரிவித்துக் கொள்ளும் வேளை ரமழான் காலத்தில் மேற்கொண்ட பேருபகாரத்தை ரமழானுடன் மட்டுப்படுத்திக் கொள்ளாமல் அதற்கப்பாலும் தொடருமாறு விநயமாகக் கோருகிறேன்.
கருணையாளன் அல்லாஹ்வின் அருள் நம் அனைவர் மீதும் உண்டாவதாக!
ஈத் முபாரக்!
அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர்
பொதுச் செயலாளர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
2006.10.17

-
நினைவு மலர்கள்
* கிண்ணியா அல்-குல்லிய்யத்துஸ் ஸஃதிய்யஹ் பட்டமளிப்பு விழா நினைவு மலர் - 2004
* பொலன்னறுவை அல்-குல்லிய்யத்துல் மஜீதிய்யஹ் பட்டமளிப்பு விழா நினைவு மலர் - 2006
* புத்தளம் அல்-குல்லிய்யத்துல் இஸ்லாஹிய்யஹ் பட்டமளிப்பு விழா நினைவு மலர் - 2006
* கல்ஹின்னை ஜாமிஅத்துல் பத்தாஹ் பட்டமளிப்பு விழா நினைவு மலர் - 2007
* அலவத்துகொட மத்ரஸத்து பரீரஹ் நினைவு மலர் - 2007
* ஏறாவூர் கைரிய்யஹ் அரபுக் கல்லூரி முதலாவது பட்டமளிப்பு விழா நினைவு மலர் - ஹி.பி. 1428 கி.பி. 2007
* கொழும்பு இஹ்ஸானிய்யஹ் அரபுக் கல்லூரி இரண்டாவது பட்டமளிப்பு விழா நினைவு மலர் - 2008
* பதுளை பஹ்மிய்யஹ் அரபுக் கல்லூரி ஐந்தாவது பட்டமளிப்பு விழா நினைவு மலர் - 2009
* அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா - முல்லைத்தீவு மாவட்டக் கிளையின் 25 ஆண்டு நிறைவு நினைவு மலர் - ஹி.பி. 1430 கி.பி. 2009
* புத்தளம் குல்லிய்யத் மன்பஃ அல்-சாலிஹாத் பட்டமளிப்பு விழா நினைவு மலர் - 2013
* புத்தளம் குல்லிய்யத் இஹ்யாஃ அல்-உலூம் பட்டமளிப்பு விழா நினைவு மலர் - 2013
பெருநாள் வாழ்த்துச் செய்திகள்
* ஈத் அல்-பித்ர் - ஹி.பி. 1424 கி.பி. 2003
* ஹஜ் பெருநாள் - ஹி.பி. 1424 கி;.பி. 2004
* ஈத் அல்-பித்ர் - ஹி.பி. 1425 கி.பி. 2004
* ஈத் அல்-பித்ர் - ஹி.பி. 1426 கி.பி. 2005
* ஈத் அல்-அழ்ஹா - ஹி.பி. 1426 கி.பி. 2006
* ஈத் அல்-பித்ர் - ஹி.பி. 1427 கி.பி. 2006
* ஈத் அல்-அழ்ஹா - ஹி.பி. 1427 கி.பி. 2006
* ஈத் அல்-பித்ர் - ஹி.பி. 1428 கி.பி. 2007
சமூகம் சார்ந்தவை
* உள்நாட்டு யுத்தம் முடிவு - 2009
* பங்கொல்லாமட அல்-ஹிலால் பொதுநல அமைப்பின் இஸ்லாமிய தினவிழா - ஹி.பி. 1431 கி.பி 2010
பத்திரிகை
* எங்கள் தேசம் பத்திரிகை 100ஆவது இதழ் – 2007
* இத்திஹாத் அல்-நூரிய்யீனின் அல்-கலம் காலாண்டு சஞ்சிகை - 2012