Felicitations
ஈத் அல்-அழ்ஹா - ஹி.பி. 1426 கி.பி. 2006
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பொதுச் செயலாளர்
அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர் அவர்களின்
ஈத் அல்-அழ்ஹா வாழ்த்துச் செய்தி
ஹிஜ்ரி 1426 இன் தியாகத் திருநாளைக் கொண்டாடும் முஸ்லிம் சமூகத்து சகோதர, சகோதரிகளுக்கு என் சார்பாகவும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சார்பாகவும் மனம் நிறைந்த, உளங்கனிந்த ஈத் அல்-அழ்ஹா நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பூரிப்படைகின்றேன்.
உறவுகளின் மீதான பாசம், மனத்தின் ஆசைகள், இதயத்தின் தேடுதல்கள் ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து சென்று, தன் அன்பு மகனை அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிடத் தயாரான இறைத் தூதர் இப்ராஹீம் (அலைஹிஸ் ஸலாத்து வஸ்ஸலாம்) அவர்களின் அசாதாரண துணிவை கடந்த ஐயாயிரம் ஆண்டுகளாக நினைவு கூருவதைப் போலவே இன்றும் முஸ்லிம் சமூகம் அதை நினைவுபடுத்துகிறது. அன்னாரின் வயோதிப காலத்தில் பிறந்த அந்த மகனுக்குப் பதிலாக ஒரு ஆட்டை பிரதியீடு செய்யும் பொருட்டு அவர்களுக்கு அனுப்பி வைத்து அல்லாஹ் தன் அடியாரின் உறுதியான அர்ப்பணிப்புக்கு பதிலளித்தமை யாவரும் அறிந்ததே.
இப்ராஹீம் (அலைஹிஸ் ஸலாத்து வஸ்ஸலாம்) அவர்களின் அவ்வுன்னத செயற்பாட்டைப் பின்பற்றி பெருநாள் தின தொழுகைக்குப் பின்னர் தொடங்கி தொடர்ந்து வரும் மூன்றாம் நாள் சூரிய அஸ்தமனத்துக்கு முன்னர் முஸ்லிம் சமூகம் உழ்ஹிய்யா என்னும் கடமையான மிருகங்களை அறுத்து அவற்றின் இறைச்சியை ஏழைகளுக்கும், தேவையுள்ளோருக்கும் பகிர்ந்தளிக்கும் செயற்பாட்டை செய்து வருகிறது.
அபரிமிதமான நலன்களைக் கொண்டுவரும் இச்சன்மார்க்க வணக்கத்தை நிறைவேற்றும் போது நாட்டின் நிலையைக் கருத்திற் கொண்டு, எவரிடமிருந்து எது வரினும் அதனைப் பொறுத்துக் கொண்டு தாய் நாட்டிற்கு விசுவாசமாகவும், நாட்டில் வாழும் சக சமூகங்களுடன் இசைவாகவும் நடப்பதற்கான பிரமாணம் ஒன்றை முஸ்லிம் சமூகம் செய்து கொள்வதோடு, எவனுக்கு மாத்திரம் அபயமளிக்க முடியுமோ அந்த அல்லாஹ்விடமே உதவி தேட வேண்டும்.
எமக்குள்ளான பிரச்சினைகளை சீர்செய்து கொண்டு, நமது இருப்புக்கு சவால் விடுக்கும் எப்பிரச்சினை எவ்வழியிலிருந்து வரினும் அதற்கு முகங்கொடுக்கக் கூடிய வகையில் கைகோர்த்து நிற்க வேண்டிய அவசியத்தை இந்தருணத்தில் வலியுறுத்துவது எனது கடமையாகும்.
ஈத் முபாரக்!
அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர்
பொதுச் செயலாளர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
2006.01.02

-
நினைவு மலர்கள்
* கிண்ணியா அல்-குல்லிய்யத்துஸ் ஸஃதிய்யஹ் பட்டமளிப்பு விழா நினைவு மலர் - 2004
* பொலன்னறுவை அல்-குல்லிய்யத்துல் மஜீதிய்யஹ் பட்டமளிப்பு விழா நினைவு மலர் - 2006
* புத்தளம் அல்-குல்லிய்யத்துல் இஸ்லாஹிய்யஹ் பட்டமளிப்பு விழா நினைவு மலர் - 2006
* கல்ஹின்னை ஜாமிஅத்துல் பத்தாஹ் பட்டமளிப்பு விழா நினைவு மலர் - 2007
* அலவத்துகொட மத்ரஸத்து பரீரஹ் நினைவு மலர் - 2007
* ஏறாவூர் கைரிய்யஹ் அரபுக் கல்லூரி முதலாவது பட்டமளிப்பு விழா நினைவு மலர் - ஹி.பி. 1428 கி.பி. 2007
* கொழும்பு இஹ்ஸானிய்யஹ் அரபுக் கல்லூரி இரண்டாவது பட்டமளிப்பு விழா நினைவு மலர் - 2008
* பதுளை பஹ்மிய்யஹ் அரபுக் கல்லூரி ஐந்தாவது பட்டமளிப்பு விழா நினைவு மலர் - 2009
* அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா - முல்லைத்தீவு மாவட்டக் கிளையின் 25 ஆண்டு நிறைவு நினைவு மலர் - ஹி.பி. 1430 கி.பி. 2009
* புத்தளம் குல்லிய்யத் மன்பஃ அல்-சாலிஹாத் பட்டமளிப்பு விழா நினைவு மலர் - 2013
* புத்தளம் குல்லிய்யத் இஹ்யாஃ அல்-உலூம் பட்டமளிப்பு விழா நினைவு மலர் - 2013
பெருநாள் வாழ்த்துச் செய்திகள்
* ஈத் அல்-பித்ர் - ஹி.பி. 1424 கி.பி. 2003
* ஹஜ் பெருநாள் - ஹி.பி. 1424 கி;.பி. 2004
* ஈத் அல்-பித்ர் - ஹி.பி. 1425 கி.பி. 2004
* ஈத் அல்-பித்ர் - ஹி.பி. 1426 கி.பி. 2005
* ஈத் அல்-அழ்ஹா - ஹி.பி. 1426 கி.பி. 2006
* ஈத் அல்-பித்ர் - ஹி.பி. 1427 கி.பி. 2006
* ஈத் அல்-அழ்ஹா - ஹி.பி. 1427 கி.பி. 2006
* ஈத் அல்-பித்ர் - ஹி.பி. 1428 கி.பி. 2007
சமூகம் சார்ந்தவை
* உள்நாட்டு யுத்தம் முடிவு - 2009
* பங்கொல்லாமட அல்-ஹிலால் பொதுநல அமைப்பின் இஸ்லாமிய தினவிழா - ஹி.பி. 1431 கி.பி 2010
பத்திரிகை
* எங்கள் தேசம் பத்திரிகை 100ஆவது இதழ் – 2007
* இத்திஹாத் அல்-நூரிய்யீனின் அல்-கலம் காலாண்டு சஞ்சிகை - 2012