Felicitations
ஈத் அல்-பித்ர் - ஹி.பி. 1428 கி.பி. 2007
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பொதுச் செயலாளர்
அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர் அவர்களின்
ஈத் அல்-பித்ர் வாழ்த்துச் செய்தி
முஸ்லிமை பழுக்கக் காய்ச்சித் தட்டியெடுத்து உருவமைத்து மாசற்ற பத்தரை மாற்றுப் பசும் பொன்னாக இளங்கச் செய்யும் நோக்குடன் பிரதி வருடமும் வந்து போகின்ற ரமழானில் ஒரு மாத கால பயிற்சிப் பட்டறையை நிறைவு செய்து கொண்டு நோன்புப் பெருநாளை இன்று கொண்டாடுகின்ற அனைத்து இஸ்லாமிய நெஞ்சங்களுக்கும் எனது உளம் நிறைந்த ஈத் அல்-பித்ர் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் அக மகிழ்கின்றேன்.
புலன்களை அடக்கி பொறுமை, சகிப்புத்தன்மை, ஈகை போன்ற உதார குணங்களுக்கு பயிற்றுவித்து, கருணை, வாஞ்சை போன்ற உன்னத பண்புகளை உண்டாக்கி, சேய்மைப்பட்டிருந்த இதயங்களையும் இணைக்க உதவிட்ட இனிய ரமழான் இனியும் தனக்குக் கிடைக்க வேண்டும் எனும் பேரார்வத்துடனும், பெரும் பிரார்த்தனையுடனும் ஒவ்வொரு முஸ்லிமும் நேற்று அப்புனித மாதத்தை வழியனுப்பி வைத்தான். விழித்திருந்து, பசித்திருந்து, தாகித்திருந்து எழுந்தும், குணிந்தும், பணிந்தும் இரவு, பகல் பாராது விருப்பு, வெறுப்புகளை ஓரங்கட்டி விட்டு பல்வேறு வணக்க வழிபாடுகளில் தன்னை ஈடுபடுத்தி இறைவனின் முன் முழுமையான அடிமைத்துவத்தை ஒரு முஸ்லிம் வெளிப்படுத்திட பயிற்றுவித்த மாதம் கண்ணியமிக்க ரமழான்.
வாழ்க்கையில் என்னதான் ஆயிரமாயிரம் பிரச்சினைகள், சிக்கல்கள், கவலைகள் இருந்தாலும் தனது உடலையும், உள்ளத்தையும், செல்வத்தையும் தூய்மைப்படுத்திக்கொள்ளும் பொருட்டு இம்மாதத்தில் பெரும் பிரயத்தனங்கள் செய்து இறை நெருக்கத்தைப் பெற முயன்றிட்ட ஒவ்வொரு முஸ்லிமும் உண்மையில் பாக்கியசாலிதான்.
ரமழானில் பெற்றிட்ட பயிற்சிகளை வாழ்க்கையில் தொடர்வோம்! மனந் திறந்து பேசுவோம்! உணர்வுகளையும், உரிமைகளையும், உயிர்களையும், உடமைகளையும் மதிப்போம்! ஐக்கியத்துடன் கைகோர்ப்போம்! அமைதியும் சமாதானமும் மீண்டும் மலர்ந்திட இறைஞ்சுவோம்!
ஈத் முபாரக்!
அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர்
பொதுச் செயலாளர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
2007.10.08

-
நினைவு மலர்கள்
* கிண்ணியா அல்-குல்லிய்யத்துஸ் ஸஃதிய்யஹ் பட்டமளிப்பு விழா நினைவு மலர் - 2004
* பொலன்னறுவை அல்-குல்லிய்யத்துல் மஜீதிய்யஹ் பட்டமளிப்பு விழா நினைவு மலர் - 2006
* புத்தளம் அல்-குல்லிய்யத்துல் இஸ்லாஹிய்யஹ் பட்டமளிப்பு விழா நினைவு மலர் - 2006
* கல்ஹின்னை ஜாமிஅத்துல் பத்தாஹ் பட்டமளிப்பு விழா நினைவு மலர் - 2007
* அலவத்துகொட மத்ரஸத்து பரீரஹ் நினைவு மலர் - 2007
* ஏறாவூர் கைரிய்யஹ் அரபுக் கல்லூரி முதலாவது பட்டமளிப்பு விழா நினைவு மலர் - ஹி.பி. 1428 கி.பி. 2007
* கொழும்பு இஹ்ஸானிய்யஹ் அரபுக் கல்லூரி இரண்டாவது பட்டமளிப்பு விழா நினைவு மலர் - 2008
* பதுளை பஹ்மிய்யஹ் அரபுக் கல்லூரி ஐந்தாவது பட்டமளிப்பு விழா நினைவு மலர் - 2009
* அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா - முல்லைத்தீவு மாவட்டக் கிளையின் 25 ஆண்டு நிறைவு நினைவு மலர் - ஹி.பி. 1430 கி.பி. 2009
* புத்தளம் குல்லிய்யத் மன்பஃ அல்-சாலிஹாத் பட்டமளிப்பு விழா நினைவு மலர் - 2013
* புத்தளம் குல்லிய்யத் இஹ்யாஃ அல்-உலூம் பட்டமளிப்பு விழா நினைவு மலர் - 2013
பெருநாள் வாழ்த்துச் செய்திகள்
* ஈத் அல்-பித்ர் - ஹி.பி. 1424 கி.பி. 2003
* ஹஜ் பெருநாள் - ஹி.பி. 1424 கி;.பி. 2004
* ஈத் அல்-பித்ர் - ஹி.பி. 1425 கி.பி. 2004
* ஈத் அல்-பித்ர் - ஹி.பி. 1426 கி.பி. 2005
* ஈத் அல்-அழ்ஹா - ஹி.பி. 1426 கி.பி. 2006
* ஈத் அல்-பித்ர் - ஹி.பி. 1427 கி.பி. 2006
* ஈத் அல்-அழ்ஹா - ஹி.பி. 1427 கி.பி. 2006
* ஈத் அல்-பித்ர் - ஹி.பி. 1428 கி.பி. 2007
சமூகம் சார்ந்தவை
* உள்நாட்டு யுத்தம் முடிவு - 2009
* பங்கொல்லாமட அல்-ஹிலால் பொதுநல அமைப்பின் இஸ்லாமிய தினவிழா - ஹி.பி. 1431 கி.பி 2010
பத்திரிகை
* எங்கள் தேசம் பத்திரிகை 100ஆவது இதழ் – 2007
* இத்திஹாத் அல்-நூரிய்யீனின் அல்-கலம் காலாண்டு சஞ்சிகை - 2012