Felicitations
ஈத் அல்-பித்ர் - ஹி.பி. 1426 கி.பி. 2005
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பொதுச் செயலாளர்
அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர் அவர்களின்
ஈத் அல்-பித்ர் வாழ்த்துச் செய்தி
ஒரு மாத கால பயிற்சிப் பாசறையை முடித்துக் கொண்ட முஸ்லிம் சமூகம் உள்ளங்களில் மகிழ்ச்சி ததும்ப ஹிஜ்ரி 1426 நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்ற இவ்வேளை சகல முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கும் என் சார்பாகவும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சார்பாகவும் இதயபூர்வ ஈத் அல்-பித்ர் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் புளகாங்கிதம் அடைகின்றேன்.
இவ்வாண்டின் ஆரம்பத்திலே உலகளாவிய முஸ்லிம் உம்மத் தியாகத் திருநாள் ஹஜ் பெருநாளைக் கொண்டாடிய நேரத்தில் இருந்ததைக் காட்டிலும் அதிகமான மக்கள் நிலநடுக்கங்கள், ஆட்கொல்லி நோய்களால் இதயம் புண்ணாகி, விம்மி மெனளக் கண்ணீர் வடித்து நிற்கும் நிலையிலே மற்றுமொரு ஈகைத் திருநான் இன்று மலர்ந்துள்ளது.
முன்னெப்போதைக்காட்டிலும் இந்நாட்களில் உலகம் பேரலை, நிலநடுக்கம், பெருமழை, புயல், தொற்று நோய்கள் போன்ற வடிவங்களில் சோதனைக்கு முகங்கொடுத்து வருவதோடு பாதிக்கப்பட்டுத் துன்புறும் ஒருவர் துயர் துடைக்க இன்னுமொருவர் உதவிக் கரம் நீட்ட முடியாத நிலை உருவாகுமோ என்றெண்ணும் அளவிற்கு நாளுக்கு நாள், நாட்டுக்கு நாடு அல்லாஹ்வின் சோதனைக்கு இரையாகிக் கொண்டிருக்கிறது.
உலக மக்கள் குறிப்பாக இஸ்லாமிய உம்மத் மேலும், மேலும் பொறுமையை அனுஷ்டிக்க வேண்டிய காலம் இதுவாகும். எல்லாம் வல்ல அல்லாஹ் தனது அருள் மறையிலே இவ்வாறு குறிப்பிடுகிறான்:
“பயம் மற்றும் பசியிலிருந்து ஏதாவது ஒன்றைக்கொண்டும், செல்வங்கள், உயிர்கள், கனிக(ளின் விளைச்சல்க)ள் ஆகியவற்றில் குறைவைக் கொண்டும் நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம். மேலும் (நபியே! இவற்றைப்) பொறுத்துக் கொள்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!” (2:155)
அவ்வாறான மக்கள் துயரங்களைச் சந்திக்கையில் எவ்வாறு நடந்துகொள்வார்கள் என்றும் அல்லாஹ் சொல்கிறான்:
“அவர்கள் எத்தகையோரென்றால், தங்களுக்கு ஏதேனும் ஒரு துன்பம் பீடித்தால், “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்காகவே இருக்கிறோம்; நிச்சயமாக நாம் அவன் பக்கமே திரும்பிச் செல்பவர்களாக இருக்கிறோம்” என்றும் கூறுவார்கள்.” (2:156)
எனவே பொறுமை காத்து, அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடி, இயன்ற வரை துயருற்றோருக்கு இந்நாளிலே உதவுவோமாக!
“அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்”
அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர்
பொதுச் செயலாளர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
2005.10.27

-
நினைவு மலர்கள்
* கிண்ணியா அல்-குல்லிய்யத்துஸ் ஸஃதிய்யஹ் பட்டமளிப்பு விழா நினைவு மலர் - 2004
* பொலன்னறுவை அல்-குல்லிய்யத்துல் மஜீதிய்யஹ் பட்டமளிப்பு விழா நினைவு மலர் - 2006
* புத்தளம் அல்-குல்லிய்யத்துல் இஸ்லாஹிய்யஹ் பட்டமளிப்பு விழா நினைவு மலர் - 2006
* கல்ஹின்னை ஜாமிஅத்துல் பத்தாஹ் பட்டமளிப்பு விழா நினைவு மலர் - 2007
* அலவத்துகொட மத்ரஸத்து பரீரஹ் நினைவு மலர் - 2007
* ஏறாவூர் கைரிய்யஹ் அரபுக் கல்லூரி முதலாவது பட்டமளிப்பு விழா நினைவு மலர் - ஹி.பி. 1428 கி.பி. 2007
* கொழும்பு இஹ்ஸானிய்யஹ் அரபுக் கல்லூரி இரண்டாவது பட்டமளிப்பு விழா நினைவு மலர் - 2008
* பதுளை பஹ்மிய்யஹ் அரபுக் கல்லூரி ஐந்தாவது பட்டமளிப்பு விழா நினைவு மலர் - 2009
* அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா - முல்லைத்தீவு மாவட்டக் கிளையின் 25 ஆண்டு நிறைவு நினைவு மலர் - ஹி.பி. 1430 கி.பி. 2009
* புத்தளம் குல்லிய்யத் மன்பஃ அல்-சாலிஹாத் பட்டமளிப்பு விழா நினைவு மலர் - 2013
* புத்தளம் குல்லிய்யத் இஹ்யாஃ அல்-உலூம் பட்டமளிப்பு விழா நினைவு மலர் - 2013
பெருநாள் வாழ்த்துச் செய்திகள்
* ஈத் அல்-பித்ர் - ஹி.பி. 1424 கி.பி. 2003
* ஹஜ் பெருநாள் - ஹி.பி. 1424 கி;.பி. 2004
* ஈத் அல்-பித்ர் - ஹி.பி. 1425 கி.பி. 2004
* ஈத் அல்-பித்ர் - ஹி.பி. 1426 கி.பி. 2005
* ஈத் அல்-அழ்ஹா - ஹி.பி. 1426 கி.பி. 2006
* ஈத் அல்-பித்ர் - ஹி.பி. 1427 கி.பி. 2006
* ஈத் அல்-அழ்ஹா - ஹி.பி. 1427 கி.பி. 2006
* ஈத் அல்-பித்ர் - ஹி.பி. 1428 கி.பி. 2007
சமூகம் சார்ந்தவை
* உள்நாட்டு யுத்தம் முடிவு - 2009
* பங்கொல்லாமட அல்-ஹிலால் பொதுநல அமைப்பின் இஸ்லாமிய தினவிழா - ஹி.பி. 1431 கி.பி 2010
பத்திரிகை
* எங்கள் தேசம் பத்திரிகை 100ஆவது இதழ் – 2007
* இத்திஹாத் அல்-நூரிய்யீனின் அல்-கலம் காலாண்டு சஞ்சிகை - 2012