Condolences
சன்மார்க்கக் கல்வித் துறை வளர்ச்சிக்கு தன்னை அர்ப்பணித்தவர்
அஷ்-ஷைக் சர்தார் கான்
- அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் செயற்படும் உறுப்பினரும்,
மத்திய குழு, பத்வாக் குழுக்களின் அங்கத்தவருமான அஷ்-ஷைக் எம்.எச்.கே.சர்தார்
கான் அவர்கள் 2004.08.10 ஆந் தேதி இறையடி சேர்ந்த செய்தி எம் இதயத்தை வருத்துகிறது.
இவ்வாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எச்.அப்துல்
நாஸர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதுளை பஹ்மிய்யா அரபுக் கல்லூரி, கொழும்பு இஹ்ஸானியா அரபுக் கல்லூரி ஆகிய சன்மார்க்கக்
கல்வித் தாபனங்களில் முறையே அதிபராகவும், உதவிப் பணிப்பாளராகவும் பணியாற்றி
பெருந் தொகையான ஆலிம்களை உருவாக்கிய அஷ்-ஷைக் சர்தார் கான் அவர்கள் மஹரகம கபூரிய்யா
அரபுக் கல்லூரியில் தனது சன்மார்க்கக் கல்வியை முடித்துக் கொண்டு வெளியேறிய
நாள் தொட்டு வாழ்வின் இறுதிக் கட்டம் வரையில் சன்மார்க்கக் கல்வித் துறைக்காக
அயராது உழைத்தவராவார். தமது இறுதிக் காலத்தில் கொழும்பு இஹ்ஸானிய்யா அரபுக்
கல்லூரியில் தனது கல்விப் பணியைச் செய்து கொண்டிருந்தார்.
சிறந்த கல்விமானான இவர் இஸ்லாமிய கொள்கைக் கோட்பாட்டு(அக்கீதா)த் துறையில்
“இஸ்லாமியக் கொள்கையும், முரண்பாடுகளும்” என்ற நூலைத் தமிழில் வெளியிட்டு அத்துறைக்குத்
தனது மேன்மையான பங்களிப்பைச் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பழக்கத்துக்கு இனியவரான, நற் குணங்கள் நிறைந்த அன்னாரின் பிரிவு இந்நாட்டின்
இஸ்லாமியச் சமூகத்திலும், குறிப்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிலும்
பாரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது.
கருனைக் கடலான அல்லாஹு தஆலா அன்னாரின் சேவைகளைப் பொருந்திக் கொண்டு, ஜன்னத்துல்
பிர்தவ்ஸில் அன்னாரைச் சேர்ப்பிப்பானாக என பிரார்த்திக்கும் அதே வேளை, அன்னாரின்
பிரிவுத் துயரில் ஆழ்ந்துள்ள அவரின் மனைவிமார், பிள்ளைகளுக்கும், ஏனைய உற்றார்
உறவினர்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது ஆழ்ந்த அனுதாபத்தைத்
தெரிவிக்கின்து.
அஷ்-ஷைக் எச்.அப்துல் நாஸர்
பொதுச் செயலாளர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
2004.08.10
* பெண் கல்விக்காக தன்னை அப்பணித்தவர் இஸ்மாயீல் மௌலானா
* நீதியரசர் எம். ஜமீல் முஸ்லிம் சமூகத்தின் இழந்து போன ஒரு சொத்து
* அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சோகம் தெரிவிக்கிறது
* கலாநிதி நிஸாமுத்தீனுக்காக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வருந்துகிறது
* தனவந்தர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர் அல்-ஹாஜ் நளீம்
* மவ்லவி எஸ்.எச்.எம். ஜஃபர் சாதுவான கல்விமான்
* மவ்லவி எஸ்.எச்.எம். ஜஃபர் - கடிதம்
* சன்மார்க்கக் கல்வித் துறை வளர்ச்சிக்கு தன்னை அர்ப்பணித்தவர் அஷ்-ஷைக் சர்தார் கான்
* ருவைஸ்தீன் ஹாஜியார் சில நினைவுகள்