Condolences
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சோகம் தெரிவிக்கிறது
- பொதுச் செயலாளர்
இரு புனிதத் தலங்களின் அறங்காவலர் மன்னர் பஹ்த் இப்னு
அப்தில் அஸீஸ் அவர்களின் மறைவைத் தாங்கி வந்த செய்தி முஸ்லிம் உலகையும், முஸ்லிம்
அல்லாத நாடுகளை நோக்கியும் அதிர்ச்சியலைகளை அனுப்பியுள்ளது. இவ்வாறு அகில இலங்கை
ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எச்.அப்துல் நாஸர் விடுத்துள்ள
அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி மண்ணில் எழுத்தறிவின்மைக்கு எதிராகப் போராடிய ஒப்புவமையற்ற சமகால அரபு
ஆட்சியாளராக சந்தேகமற மன்னர் பஹ்த் இப்னு அப்தில் அஸீஸ் விளங்கியுள்ளார். கல்வி
அமைச்சருக்கான பொறுப்பை சிரமேற்கொண்டு அந்நாட்டின் அறிவு வளர்ச்சிக்காக, விசேடமாக
முதியோர் எழுத்தறிவு மேம்பாட்டிற்காக அவர் ஆற்றிய அளப்பரிய சேவை அந்நாட்டிற்கு
ஒரு நல்ல அறுவடையைப் பெற்றுக்கொடுத்துள்ளது.
இரு புனிதத் தலங்களின் விஸ்தரிப்பு, முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும்
நாடுகளுக்கு நன்கொடையாக வழங்கும் பொருட்டு பாரிய அளவில் புனித அல்-குர்ஆனை
மொழிபெயர்த்துப் பதிப்புக்கும் தாபனத்தை நிறுவல், சவுதி மண்ணில் பு+தாகர உட்கட்டமைப்பு
அபிவிருத்திகள் போன்றவை 24 ஆண்டு கால ஆட்சியில் மன்னர் பஹ்த் இப்னு அப்தில்
அஸீஸ் புரிந்த மகத்தான சேவைகளுக்கு உரைக்கல்லாகும். முஸ்லிம் அல்லாதார் ஆதிக்கம்
கொண்ட நாடுகளில் இஸ்லாத்தின் மேம்பாட்டிற்கு தொடராக அவரால் வழங்கப்பட்ட நிதி
உள்ளிட்ட பிற உதவிகள் புகழ்ந்துரைக்கப் பெறுமதியுடையவை.
மன்னர் பஹ்த் இப்னு அப்தில் அஸீஸ் அவர்களுக்காகப் பிரார்த்திக்கவென உயரும்
கைகளுடன் சேர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் தன் கைகளை உயர்த்திக்கொள்கிறது.
எல்லாம் வல்ல அல்லாஹ் அவரை ஜன்னத்தின் பால் அழைத்துக்கொள்வானாக!
அஷ்-ஷைக் எச்.அப்துல் நாஸர்
பொதுச் செயலாளர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
2005.08.01
* பெண் கல்விக்காக தன்னை அப்பணித்தவர் இஸ்மாயீல் மௌலானா
* நீதியரசர் எம். ஜமீல் முஸ்லிம் சமூகத்தின் இழந்து போன ஒரு சொத்து
* அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சோகம் தெரிவிக்கிறது
* கலாநிதி நிஸாமுத்தீனுக்காக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வருந்துகிறது
* தனவந்தர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர் அல்-ஹாஜ் நளீம்
* மவ்லவி எஸ்.எச்.எம். ஜஃபர் சாதுவான கல்விமான்
* மவ்லவி எஸ்.எச்.எம். ஜஃபர் - கடிதம்
* சன்மார்க்கக் கல்வித் துறை வளர்ச்சிக்கு தன்னை அர்ப்பணித்தவர் அஷ்-ஷைக் சர்தார் கான்
* ருவைஸ்தீன் ஹாஜியார் சில நினைவுகள்