Reviews
நூலின் பெயர் : என் நினைவில் நிந்தவூர்
நூலாசிரியர் பெயர் : எம்.எச். இக்பால் ஹஸன்
இன்று நிந்தவூரில் இருந்தேன். பாசம், நேசம் நிறைந்த சகோதரர் ஒலுவில் ஷிஹான் அவர்களிடம் புதிய நூல்கள் ஏதும் வெளிவந்துள்ளனவா எனக் கேட்டேன். ஆம் என்றவர் அந்த நூலையும் உடனடியாக எனக்கு பெற்றுக் கொடுத்தார். அவருக்கு நன்றிகள் பல. ஜஸாஹ் அல்லாஹ் கைரா.
அது நிந்தவூர் பற்றிய நூல். நூலின் தலைப்பு 'என் நினைவில் நிந்தவூர்'. ஆசிரியர் எம்.எச். இக்பால் ஹஸன்.
384 பக்கங்களில் அமைந்துள்ள இந்த நூல் நிந்தவூரின் புவியியல் அமைப்பு, நிர்வாகம், பொருளாதாரம், கல்வி, அரசியல், பண்பாடு, கலாசாரம், விளையாட்டு போன்ற விடயங்கள் பற்றி பேசுகிறது. 84 வயதினரான நூலாசிரியர் நிந்தவூர் பற்றி தன் ஞாபகத்திலுள்ளவற்றை வைத்து இந்நூலை யாத்துள்ளார்.
அடுத்து வரும் தலைமுறையினருக்கு இந்த நூல் ஒரு வரலாற்று ஆவணம்.
நிந்தவூரிலிருந்து எந்தன் ஊர் நோக்கி திரும்பி வரும் வழியில் குறித்த நூலின் பல பக்கங்களைப் படித்தேன். பயனுள்ள பல தகவல்கள் அதில் உள்ளடங்கியுள்ளன. யாவரும் படித்து பயனுறுக!
அபூ அவ்வாப் ஹனிபா அப்துல் நாஸர்
2019.09.04