நிறைய நிறைய பிரயாசைப் பட்டால் நிறைய நிறைய அடையலாம். முனைகின்ற மட்டு கைமேல் பலன் கிட்டும். எல்லோரும் பாடுபட வேண்டும். பாடுபட்டுக்கொண்டே இருக்க வேண்டும். முனைந்தும் கிடைக்கவில்லை என்பதற்காக ஒரு தடவையுடன் நிறுத்திக்கொள்ளாது மீண்டும் மீண்டும் முயல வேண்டும். ‘விடா முயற்சி வெற்றிக்கு வழி’ என்பர். உழைப்பாளியை எவரும் புகழ்வர். சோம்பேறியை எல்லோரும் இகழ்வர். ‘முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்’ என்பது இந்த வகையில்தான்.