Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Articles

60 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம்


சுமார் 60 வருடங்களுக்கு முன்னர் இலங்கைப் பாராளுமன்றத்தில் நடைபெற்றதாக மூத்தவர்கள் சிலர் சொல்லக் கேட்ட சம்பவம் ஒன்று சென்ற சில தினங்களாக என் நினைவில் வந்து போகிறது.

ஒரு பொதுத் தேர்தல் முடிந்த கையோடு புதிதாக தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களை முறையாக பதிவுசெய்துகொள்ளும் பொருட்டு அவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட தினத்தில் பாராளுமன்றத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இப்போது போல் நவீன தொழில் நுட்ப வசதிகள் இல்லாத காலம். தொகுதிவாரித் தேர்தல் முறை நடைமுறையிலிருந்த காலம். வருகை தந்துள்ள புதிய அங்கத்தவர்களை அவரவர் பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுதியோடு உறுதிசெய்துகொண்டிருக்கிறார் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம். திடீரென அவருக்கு சற்றும் எதிர்பாராத ஒரு பிரச்சினை. அதாவது அகலவத்த தேர்தல் தொகுதிக்கு இருவர் பிரதிநிதிகளாக வந்துள்ளனர். ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த முயன்ற செயலாளர் நாயகத்துக்கு காத்திருந்தது ஒரு பெரும் ஆச்சரியமும் சிரிப்பும். இருவரில் ஒருவர் முன்னைய தினம் அங்கோட மனநோயாளர் வைத்தியசாலையிலிருந்து தப்பியோடி வந்திருக்கிறார்.

இது உண்மையாக நடந்த நிகழ்ச்சியாக சில மூத்தவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கின்றேன். இந்து சமுத்திரத்தின் நித்திலமாம் எழில் கொஞ்சும் இலங்கையின் அதி உயர் சபையான பாராளுமன்றத்தில் கடந்த மூன்று தினங்களாக நடைபெற்றுவருகின்ற கண்றாவி நிகழ்வுகளைப் பார்க்கும்போதெல்லாம் இந்த சம்பவமே என் ஞாபகத்தில் சிறகடிக்கிறது. கருத்துரை தேவையில்லை என்பதால் தவிர்த்துக்கொள்கிறேன்.

எச். அப்துல் நாஸர்

1440.03.08
2018.11.17


 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page