Ash-Shaikh H. Abdul Nazar

Welcome to
official website of
Ash-Shaikh
H. Abdul Nazar

مرحبا بكم
في الموقع الرسمي
لفضيلة الشيخ
عبد الناصر بن حنيفة

من يرد الله به خيرا يفقهه في الدين

 

Articles

தூய்மையற்ற நண்பன்


இது கவிராயர் இமாம் ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் மற்றுமொரு கவிதை. தூய்மையான நட்பு பற்றி புல்புல் இசைக்கிறார்கள் இமாம் அவர்கள்.

இவை இலக்கிய நயம் சொட்டும் இமாம் அவர்களின் அரபு வரிகள்:

إذا المرء لا يرعاك إلا تكلفا - فدعه ولا تكثر عليه التأسفا
ففي الناس أبدال وفي الترك راحة - وفي القلب صبر للحبيب ولو جفا
فما كل من تهواه يهواك قلبه - ولا كل من صافيته لك قد صفا
إذا لم يكن صفو الوداد طبيعة - فلا خير في خل يجئ تكلفا
ولا خير في خل يخون خليله - ويلقاه من بعد المودة بالجفا
وينكر عيشا قد تقادم عهده - ويظهر سرا كان بالأمس في خفا
سلام على الدنيا إذا لم يكن بها - صديق صدوق صادق الوعد منصفا

தமிழாக்கித் தந்துள்ளேன். படித்துப்பாருங்கள்.

மனிதன் உன்னை வெளிப்பகட்டாக பேணுகிறானென்றால்
அவனை விட்டுவிடு! அவன் மீது அதிகம் கவலைப்படாதே!
மனிதர்களில் மாற்றீடுகள் உள்ளனர், விடுவதில் நிம்மதி உண்டு
தோழன் புறக்கனித்துவிட்டாலும் இதயம் அவனைப் பொறுத்துக்கொள்ளும்
நீ விரும்புகிற எல்லோரின் இதயமும் உன்னை விரும்புவதாக இல்லை
நீ தூய்மையாக நேசித்த எல்லோரும் உனக்கு தூய்மையாய் இல்லை
அன்புத் தூய்மை இயல்பானதாக இல்லையெனில்
வெளிப்பகட்டாக வரும் நண்பனில் நன்மை இல்லை
தன் சிநேகிதனுக்கு துரோகமிழைக்கின்ற
நட்பின் பின் அவனை புறக்கனித்துவிடுகின்ற
பழைய வாழ்வை மறுத்துவிடுகின்ற
மறைவாக இருந்த நேற்றைய இரகசியத்தை அம்பலப்படுத்திவிடுகின்ற
நண்பனில் நன்மை இல்லை
உண்மையான, வாக்குறுதி தவறாத, நடுநிலையான நண்பன்
பாரில் இல்லையென்றால் அவனிக்கு ஸலாம்

கவியுலகுக்குச் சிறப்புச் சேர்த்த இமாம் ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் இந்தக் கவிதையை இன்றுதான் எனக்கு முழுமையாக படிக்கக்கிடைத்தது. தூய நட்பும் கபட நட்பும் பற்றி சென்ற ஆண்டு அடியேன் ஒரு கவிதை எழுதினேன். இரண்டையும் ஒரு கணம் ஒப்பிட்டுப்பார்த்தேன். பொருளில் நிறைய ஒற்றுமை இருக்கக் கண்டேன். எனது கவிதை என் அனுபவத்தின் உந்தல். இமாம் அவர்களது கவிதையின் பின்புலம் என்னவோ? நாளை இன் ஷா அல்லாஹ் என் கவிதையைப் பதிவிட முயல்கின்றேன்.

அபூ அவ்வாப் ஹனிபா அப்துல் நாஸர்

1439.07.23
2018.04.11


 

Copyright © 2011 - 2018 | All rights reserved to Ash-Shaikh H. Abdul Nazar

Message to us Visit our twitter page Visit our facebook page